வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (01/11/2018)

``மாட்டிறைச்சி கொடுத்துவிடாதீர்கள்!’’ - `கிரிக்கெட் ஆஸ்திரேலியா’வுக்கு பி.சி.சி.ஐ கோரிக்கை

இந்திய வீரர்களுக்கான உணவில் மாட்டிறைச்சி வேண்டாம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டுள்ளது.

பி சி சி ஐ

வெஸ்ட் இண்டீஸ்அணியுடன் இந்தியா டெஸ்ட், டி 20, ஒருநாள் போட்டிகளைச் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக டி20 போட்டிகள் தொடங்க உள்ளன. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி மூன்று டி 20, நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 21 முதல் ஜனவரி 18-ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இது தொடர்பான இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வீரர்களுக்கான உணவு, தங்குமிடம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இதனிடையே இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது வீரர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கப்பட்டது. இது பி.சி.சி.ஐ-க்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது, இந்திய வீரர்களின் மெனுவில் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு பி.சி.சி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் வெஜிடேரியன் உணவுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.