வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (04/11/2018)

கடைசி தொடர்பு:18:58 (04/11/2018)

`குர்ணால் பாண்டியா, கலீல் அகமது அறிமுகம்!’ - முதல் டி20 போட்டியில் ஃபீல்டிங் தேர்வு செய்த இந்தியா #IndvWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

கலீல் அகமது - குர்ணால் பாண்டியா

Photo Credit: BCCI

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்குகிறது. துபாயில் இருந்து கொல்கத்தா வரும் இணைப்பு விமானத்தைத் தவறவிட்டதால் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் ரஸல் பங்கேற்கவில்லை. 

இந்திய அணி (பிளேயிங் லெவன்): 

ரோஹித் ஷர்மா, தவான், ராகுல், ரிஷப் பண்ட், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், குர்ணால் பாண்டியா, குல்தீப் யாதவ், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ். 

வெஸ்ட் இண்டீஸ் (பிளேயிங் லெவன்): 

பவல், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், ஹெட்மெயர், தினேஷ் ராம்தின், கிரென் போலார்ட், பிராத்வொய்ட், கிரென் பவெல், ஆலென், கேரி பியரி, தாமஸ்.