வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (05/11/2018)

கடைசி தொடர்பு:16:40 (05/11/2018)

`கிரிக்கெட்டின் சாம்ராட்டே’ - கோலிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்

 விராட் கோலியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விராட்

 

இந்திய கிரிக்கெட்  அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காதல் மனைவி அனுஷ்கா சர்மாவை கரம்பிடித்த பின்னர் கோலி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. கோலியின் பிறந்தநாளையடுத்து ட்விட்டரில் #HappyBirthdayVirat என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கோலிக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உலக கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத நபராக விராட் கோலி இருக்கிறார். களத்தில் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளிக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். இந்த வருடத்தில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.  கிரிக்கெட் உலகில் முன்னாள் வீரர்கள் படைத்த பல சாதனைகளை முறியடித்து வருகிறார் இந்த ரன் மெஷின்.

விராட் கோலிக்கு அவரின் மனைவி அஷ்கா சர்மா, ``இவரின் பிறப்புக்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்” என்ற கேப்சனுடன் விராட்டுடன் அனுஷ்கா இருக்கும் அழகிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

``இந்த வருடமும் உங்கள் வாழ்க்கை ரன்களால் நிறைந்திருக்க வாழ்த்துகள்” என முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 ``கிரிக்கெட்டின் போர்வீரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் நண்பரே” என இந்திய கிரிகெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.