வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (05/11/2018)

கடைசி தொடர்பு:17:47 (05/11/2018)

விராட் கோலி பிறந்தநாளில் தோனி பகிர்ந்த நாஸ்டால்ஜி போட்டோ! #Viral

விராட் கோலிக்கு கிரிக்கெட் உலகம் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தோனி தெரிவித்த வாழ்த்து அனைவரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. மேலும், வாழ்த்து தெரிவித்து தோனி வெளியிட்ட வீடியோ செம்ம வைரலாகி வருகிறது.

விராட் கோலி


`விராட் கோலி' இப்படியொரு பெயரை தவிர்த்து உங்களால் கிரிக்கெட் வரலாற்றை பின்னாளில் எழுத முடியாது. அவரை நேசிக்கலாம், வெறுக்கலாம், ஆனால் ஒருபோதும் ஒதுக்கிவிட முடியாது. `ரன் மிஷின்' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விராட்டுக்கு இன்று முக்கியமான நாள். ஆம்! `சிக்கூ'வின் பிறந்த நாள் இன்று. `சிக்கூ' இது விராட் கோலியின் செல்லப்பெயர். 1988-ம் ஆண்டு பிறந்த அவர் தனது 30-வது வயதை இன்று தொட்டிருக்கிறார். காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவை கரம்பிடித்து கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது. கிரிக்கெட் உலகமே அவருக்கு வாழ்த்து மழையைப் பொழிந்து வருகிறது.

தோனி

ட்விட்டரில் #Happybirthdayvirat ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இப்படியான நிலையில், தோனி தெரிவித்த வாழ்த்து ரசிக்கும்படியாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அவர் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை பலரும் வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில் `ஹாய் விராட்! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எனக்குத் தெரியும், நீங்கள் மிகப்பெரிய பப்ஜி விளையாட்டின் ரசிகர் என்பது..!’ என்று கூறி கோலி சிறுவயதில் துப்பாக்கியுடன் நின்றிருக்கும் படத்தைத் தனது மொபைலில் காட்டுகிறார் தோனி. மேலும், ``இதோ உன்னுடைய பழைய புகைப்படம். நீ ஏன் மணிஷ் பாண்டேவுக்கு பப்ஜி விளையாட சொல்லிக்கொடுக்கக் கூடாது?'' என்று ஜாலியாக வாழ்த்து தெரிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.