வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:53 (07/11/2018)

`எனக்கு நிச்சயம் இடம் இருக்கிறது' - உலகக்கோப்பை குறித்து ரஹானே நம்பிக்கை!

`உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எனக்கு நிச்சயம் இடம் இருக்கிறது' என கிரிக்கெட் வீரர் ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஹானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே. சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம்பிடித்து வருகிறார். புது வீரர்களின் வரவு, மோசமான ஃபார்ம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் பெயர் இடம்பெறுவதில்லை. இதனால் மீண்டும் அணியில் இடம்பெற வேண்டும் எனத் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற விழாவில் ரஹானே கலந்துகொண்டார். அப்போது ரஹானேவிடம் கிரிக்கெட் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்குப் பதிலளித்த அவர், ``கண்டிப்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பேன். இதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. உலகக் கோப்பைக்காகதான் விஜய் ஹசாரோ, தியோதர் டிராபி போன்ற தொடரில் விளையாடினேன். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களைக் கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. எனினும், நாங்கள் மிகவும் சிறப்பாகவே விளையாடினோம்.’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க