வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:14 (07/11/2018)

கோலியின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!

லக்னோவில் நடைபெற்று வரும் 2-வது டி20 போட்டியில் 11 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இந்தியாவுக்கான டி20 போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்த்த வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார் ரோஹித் ஷர்மா.

ரோஹித் ஷர்மா

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேதசம் மாநிலம் லக்னோவில்  நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பௌவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி ரோஹித் ஷர்மா மற்றும் தவான் இணை இன்னிங்ஸுக்கு துவக்கம் கொடுத்தது.

இதில், அணியின் கேப்டன் ரோஹித் 11 ரன்களைச் சேர்த்தன் மூலம் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்த்த வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை,  இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்தது கோலி தான். அவர் 62 போட்டிகளில் 2,102 ரன்களை, 48.88 சராசரியில் குவித்துள்ளார். அதே நேரத்தில் ரோகித் 85 போட்டிகள் விளையாடி 32.18 சராசரியில் 2,092 ரன்கள் எடுத்துள்ளார். இதன்காரணமாக அவர் 11 ரன்களைச் சேர்த்து கோலியை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.