வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:20 (07/11/2018)

தொடரை வெல்லுமா இந்தியா? - திணறும் வெஸ்ட் இண்டீஸ் அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா ரன்களைக் குவித்துள்ளது. 

இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. மேலும் முதலாவது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பௌவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரோஹித் மற்றும் தவான் இணை துவக்கம் கொடுத்தது. அதிரடியாக அடியாக இந்த இணையை, 13 ஓவரின் இறுதிப் பந்தில் ஆலன் பிரித்தார். சிக்ஸ் அடிக்க முயன்ற தவானின் பந்தை நிக்கோலஸ் தாவிப்பிடித்து ஆவுட் ஆக்கினார். இதனால் 43 ரன்களில் தவான் வெளியேறினார்.

123 ரன்களுக்கு இந்தியா தனது முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது. இதையடுத்து ரோஹித் ஷர்மாவுடன் ரிஷப் பண்ட் கைகோத்தார். ஆனால், களமறங்கி 5 ரன்களை மட்டுமே சேர்ந்த ரிஷப் பண்ட் 6-வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். கேரி பியரி வீசிய பந்தை பண்ட் தூக்கி அடிக்க, ஹெட்மேயர் அதை லாவகமாகப் பிடித்தார். கே.எல்.ராகுல் - ரோஹித் இணை ஆட்டத்தைத் தொடர்ந்தது. கடைசி ஓவர் நெருங்க அதிரடி ஆட்டம் காட்டிய ரோஹித் ஷர்மா 61 பந்துகளில் 111 ரன்களைச் சேர்ந்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அதேபோல கே.எல்.ராகுல் 26 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 195 ரன்களைக் குவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேரி பியரி,  ஆலென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.