வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:10:30 (10/11/2018)

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த முதல் நாள் - அசத்திய வீராங்கனைகள் #WWT20

பெண்கள் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று மூன்று போட்டிகள் நடந்தது. மூன்று போட்டிகளிலும் அற்புதமான சாதனைகள்.

கிரிக்கெட்


ரசிகர்களுக்கு பெண்கள் டி-20 கிரிக்கெட் விருந்து படைத்துள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. 4 -வது ஓவரில் இந்திய வீராங்கனை மந்தனா அடித்த பந்தை அற்புதமாக கேட்ச் செய்து அவரை வெளியேற்றினார் ஹேலே ஜென்சென். மந்தனா அடித்த பந்து எல்லைக்கோட்டை நோக்கி பறந்துகொண்டிருந்தது. அனைவரும் பந்து சிக்ஸர் என்றே நினைத்திருந்தனர். டீப் ஸ்கோயர் லெக்கில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஹேலே ஜென்சென் அற்புதமாகத் தாவி பந்தைப் பிடித்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் ஜென்சென்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடி பேட்டிங்கை கையில் எடுத்த இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 51 பந்துகளில் 103 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தத் தொடரில் முதல் சதத்தை  அடித்து அசத்தினார். இந்தியா 194 ரன்கள் எடுத்தது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 

இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி., அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி 113 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் (Megan Schutt) 4 ஓவர் வீசி 13 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். 16 டாட் பால்களை வீசியிருந்தார்.

மூன்றாவது போட்டியில் நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேசம் முடிவுக்கு நல்ல பலனும் கிடைத்தது. வங்கதேசம் அணிகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 106 ரன்களுக்கு சுருண்டது. மேற்கிந்திய தீவுகள் பலம்வாய்ந்த அணியாக இருந்தாலும் எளிய இலக்கு என்பதால் வங்கதேசம் வீராங்கனைகள் நம்பிக்கையுடன் களமிறங்கினர். ஆனால, அவர்களின் நம்பிக்கையை மேற்கிந்திய வீராங்கனைகள் சில்லுசில்லாக நொறுக்கினர். 46 ரன்களில் வங்கதேசம் அணி ஆல் அவுட் ஆனது. மேற்கிந்திய தீவுகள் வீராங்கனை டோட்டின் (Deandra Dottin) 4 ஓவர் வீசினார். 5 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதில் 1 மெய்டன் ஓவர், 18 டாட் பால்கள் என அசத்தினார். நேற்றைய போட்டிகள் டி-20 ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது என்றே சொல்லலாம்...!