நியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன்? - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி | Conditions in New Zealand will not be similar to Australia says Rahul Dravid

வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (13/11/2018)

கடைசி தொடர்பு:09:44 (13/11/2018)

நியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன்? - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி

`நியூசிலாந்தில் விளையாடினால் மட்டும் ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகிவிட முடியாது' என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மூன்று தொடர்களையும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கிறது இந்திய அணி. இதற்கு அடுத்த சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா செல்லவுள்ளது இந்திய அணி. மூன்று டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் என இரண்டு மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சி எடுக்கத் தொடங்கியுள்ளனர். முன்னதாக ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சீனியர் வீரர்கள் இந்திய `ஏ' அணியுடன் கலந்துகொண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளனர். ரஹானே, ரோஹித் சர்மா, முரளி விஜய், பிரித்வி ஷா, பர்தீவ் படேல், ஹனுமா விஹாரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நியூசிலாந்து போட்டிக்காக அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகுவதற்காகவே அவர்கள் நியூசிலாந்தில் விளையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதைத் திட்டவட்டமாக மறுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறும்போது, ``ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவது வீரர்களுக்குத் தேவையான ஒன்று. ஆனால், இப்போது உள்ள சூழலில், நிறைய தொடர்கள் இருப்பதால் வீரர்கள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதில்லை. நியூசிலாந்தில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி விட்டால் மட்டும் ஆஸ்திரேலியா தொடருக்குத் தயாராகிவிட முடியாது. வெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் மட்டுமே வீரர்களுக்குக் கிடைக்கும். மற்றபடி ஆஸ்திரேலியாவின் காலநிலைக்கு ஏற்ப மாற முடியாது. நியூசிலாந்து காலநிலைக்கு வேறானது ஆஸ்திரேலியாவின் காலநிலை. அதேநேரம் சீனியர் வீரர்களுடன் விளையாடிய அனுபவம் ஜூனியர் வீரர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா தொடருக்கு பின் நியூசிலாந்தில் விளையாட உள்ளது. அதற்கு ஆஸ்திரேலிய தொடர் கண்டிப்பாக உதவும்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க