வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (17/11/2018)

கடைசி தொடர்பு:10:39 (17/11/2018)

ஆஸி-யின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா

பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

கிரிக்கெட்


பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி `பி’ பிரிவில் இடம்பெற்று விளையாடி வருகிறது. தற்போது லீக் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும். இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் குரூப் `பி’ பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடிக்கும். ஆஸ்திரேலியாவும் தான் விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளும் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துவிட்டன. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும். அரையிறுதிப்போட்டிகள் வரும் நவம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டிகள் நவம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது.


இந்திய அணி இந்தத்தொடரில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 7 வருடங்களுக்குப் பிறகு அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.