வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (20/11/2018)

கடைசி தொடர்பு:08:15 (20/11/2018)

``லெஜெண்ட் வீரருடன் சிறிது நேரம்” - கில்கிறிஸ்டின் வைரல் பதிவு #AUSvIND

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், இந்திய அணியின் கேப்டன் கோலியைச் சந்தித்தது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.  

கில்கிறிஸ்ட்

இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் விளையாடும் இந்திய அணி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலியா சென்றது.  ஞாயிறு முதல், வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் அல்லாது, உலக கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் முக்கிய கிரிக்கெட் தொடராக இந்தத் தொடர் இருக்கும். ஆஸ்திரேலியா முன்பு போல இல்லை. எனினும், சொந்த மண்ணில் எந்த அணியும் பலமான அணிதான் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

கோலி

ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் உள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி, ஃபாக்ஸ் கிரிக்கெட் சேனலுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவரைப் பேட்டி கண்டவர், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறிஸ்ட். இந்தியாவிலும் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட கில்கிறிஸ்ட், கோலியிடன் எடுத்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தப் பதிவில்.  ``லெஜெண்ட் வீரருடன் சிறிது நேரம் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திறமையான, புத்திசாலித்தனமான, சுய நம்பிக்கைகொண்ட அவருடன் நேரம் செலவழித்ததில் மகிழ்ச்சி. நன்றி கோலி. விரைவில் உங்களுடன் டின்னரில் கலந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். 

பயிற்சியின் போது

Photo: Twitter/BCCI

இந்தப் புகைப்படம் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, செம வைரல் ஆனது. முன்னதாக, இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும்போது மைதானத்துக்கு வந்து கோலியுடன் பேசிவிட்டுச் சென்றார் கில்கிறிஸ்ட்.  கோலியின் பேட்டிங் ஸ்டைல் தன்னைக் கவர்ந்ததாக முன்னர் அவர்  கூறியது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியின்போது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டார். இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டது. டெஸ்ட் போட்டிகளில் கடைசிக் கட்ட வீரர்களின் பங்களிப்பு முக்கியம் என்பதால், பும்ரா பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறார்.