`எப்படி இருக்கீங்க?!’ - கொஞ்சும் தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி பதில் | Dhoni - ziva's tamil convo

வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (24/11/2018)

கடைசி தொடர்பு:20:19 (24/11/2018)

`எப்படி இருக்கீங்க?!’ - கொஞ்சும் தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி பதில்

தோனி, தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 

தோனி - ஸிவா

ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள தோனி, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்த நினைவலைகளைப் பகிர்ந்திருந்தார். யுவராஜுக்கு முன்னதாகத் தாம் களமிறங்கியது ஏன் என்பது குறித்தும் அவர் பேசியிருந்தார். 

ஓய்வு நாள்களில் தனது மகள் ஸிவாவுடன் இருப்பது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தோனியின் வழக்கம். அந்தவகையில் மகள் ஸிவாவுடன் தமிழில் உரையாடுவது போன்ற வீடியோ ஒன்றை தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். `Greetings in Two languages' என்ற தலைப்பில் தோனி பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ``எப்படி இருக்கீங்க?’ என ஸிவா கொஞ்சும் தமிழில் கேட்க, `நல்லா இருக்கேன்’ என தோனி தமிழில் பதிலளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Greetings in two language

A post shared by M S Dhoni (@mahi7781) on