அலறவிட்ட குர்ணால் பாண்டியா; தடுமாறிய ஆஸ்திரேலியா - சமன் செய்யுமா இந்தியா? | India need 165 runs to win against aussie

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (25/11/2018)

கடைசி தொடர்பு:15:53 (25/11/2018)

அலறவிட்ட குர்ணால் பாண்டியா; தடுமாறிய ஆஸ்திரேலியா - சமன் செய்யுமா இந்தியா?

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் குவித்துள்ளது.

photo credit: @bcci

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி, இன்று சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. முதல் போட்டியில், இந்திய அணி ஃபீல்டிங்கில் சொதப்பியது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. இருப்பினும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றதால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். கடந்த போட்டிகளில் செய்த தவறுகள் இந்தப் போட்டியில் திருத்திக்கொண்டால்தான் வெற்றி குறித்து சிந்திக்க முடியும். 

சிட்னியில் நடக்கும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச், முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். இன்றைய இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி, முதலில் களமிறங்கிய கேப்டன் பிஞ்ச், ஷார்ட் ஜோடி அதிரடியாக விளையாடியது. 68 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். பிஞ்ச் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கியவர்களை குர்னல் பாண்டியா கவனித்து கொண்டார். ஷார்ட், மேக்ஸ்வெல் எனச் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய வீரர்களை வெளியேற்றினார் குர்னல் பாண்டியா. அபாரமாகப் பந்துவீசிய அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்களுக்கு ஆஸ்திரேலியா ஆறு விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கவுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க