வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:18:30 (01/12/2018)

ஐ.பி.எல் ஏலம்... யாருக்கு லாபம்..? ஸ்போர்ட்ஸ் விகடன் டிசம்பர்!

தேசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மாரியம்மாள். 16 வயதுதான். ஆனால், மெஸ்ஸி போன்ற ஸ்டைல். பட்டையைக் கிளப்புகிறார். அந்தத் தொடரில் 12 கோல்கள் அடித்து, தமிழகம் சாம்பியனாக முக்கியக் காரணமாக இருந்தது அவர்தான். இப்போது இந்திய ஜூனியர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். விரைவில் சீனியர் அணியிலும் தன் ஜாலத்தைக் காட்டுவார். அவர்தான் டிசம்பர் மாத ஸ்போர்ட்ஸ் விகடன் இதழின் நாயகி!

ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பலரையும் நினைவில் வைத்திருக்கிறோம். அவர்களை இன்னும் கொண்டாடுகிறோம். ஆனால், இந்தியா வென்ற ஒரே உலகக் கோப்பை தொடரில் இருந்த இந்த வீரரை இன்றுவரை நாம் பெரிதாகக் கொண்டாடவில்லை. வி.ஜே.ஃபிலிப்ஸ் - இந்த முறை நாம் கொண்டாடியிருக்கும் லெஜண்ட்!

டிசம்பர் மாத ஸ்போர்ட்ஸ் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://bit.ly/SPORTS-DEC-2018

ஸ்போர்ட்ஸ் விகடன்

சி.எஸ்.கே என்றாலே நமக்கு நினைவு வருவது சீனிவாசன், தோனி ஆகியோர்தான். ஆனால், அவர்கள் பின்னால் இருந்து அந்த அணியை சிறப்பாக வடிவமைத்ததில் முக்கியமானவர் காசி விஸ்வநாதன். இப்போது சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. முதல் ஐ.பி.எல் ஏலத்தில் தோனியை எடுத்தது, உனத்கட்டுக்கு அதிக விலைக்குப் போட்டியிட்டது, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்காதது என பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் அவர்.

2016 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறவில்லை. மேரி கோம் அவ்வளவுதான் என்று நினைத்த வேளையில் ஆறாவது உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் மேரி கோம். அவரைப் பற்றிய உருக்கமான கட்டுரையும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெளியேற்றம், அதன் பிறகு நடந்துகொண்டிருக்கும் மிதாலி ராஜுக்கு நிகழ்ந்த சம்பவம் பற்றிய கட்டுரையும் இந்திய பெண்களைப் பற்றிப் பேசியிருக்கிறது. 

ஃபார்முலா ஒன் சீசன், நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர், ஏ.டி.பி ஃபைனலஸ் டென்னிஸ் தொடர், இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர், ஐ.பி.எல் ஏலம், மோடோ ஜீ.பி என வழக்கம்போல் ஒவ்வொரு விளையாட்டைப் பற்றிய முழு அப்டேட்டுடனும் வெளியாகியுள்ளது டிசம்பர் மாத ஸ்போர்ட்ஸ் விகடன் மின்னிதழ்! 
டிசம்பர் மாத ஸ்போர்ட்ஸ் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://bit.ly/SPORTS-DEC-2018


டிரெண்டிங் @ விகடன்