டென்னிஸ் சாம்பியன் தோனி! - ராஞ்சி கிரிக்கெட் சங்க ஆட்டத்தில் ருசிகரம் | MS Dhoni clinch champion title at local tennis tournament in Ranchi

வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (02/12/2018)

கடைசி தொடர்பு:08:26 (02/12/2018)

டென்னிஸ் சாம்பியன் தோனி! - ராஞ்சி கிரிக்கெட் சங்க ஆட்டத்தில் ருசிகரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

தோனி

photo credit: @ChennaiIPL

ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள தோனி, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வரும் அதேவேளையில், பொது நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் ராஞ்சியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் தோனி கலந்துகொண்டார்.

கண்ட்ரி கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த டென்னிஸ் தொடரில் உள்ளூர் வீரர் சுமித் குமார் என்பவருடன் இணைந்து  இரட்டையர் பிரிவில் பங்கேற்றார் தோனி. லீக், அரையிறுதி சுற்று என அனைத்து சுற்றுகளிலும் தோனி இணை சிறப்பாக செயல்பட்டது. இதன் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. மற்ற ஆட்டங்களைப் போலவே, இறுதி ஆட்டத்திலும் இந்த ஜோடி சிறப்பாக செயல்பட்டது.

தோனி

6-3, 6-3 என்ற நோ் செட் கணக்கில் எதிர் அணியை வீழ்த்திய தோனி ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே, ஹாக்கி, கால்பந்து, பைக் ரேஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள தோனி, அந்த ஆட்டங்களில் கலந்துகொண்டு விளையாடிய நிலையில் தற்போது டென்னிஸ் விளையாட்டிலும் கோலோச்சி உள்ளதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close