வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (02/12/2018)

கடைசி தொடர்பு:17:30 (02/12/2018)

`யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை!’ - விராட் கோலி #AUSvIND

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வெல்லுவதிலேயே இந்திய அணி முழு கவனம் செலுத்தும் என கேப்டன் விராட் கோலி தெரிவித்திருக்கிறார். 

விராட் கோலி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பில் இந்திய அணி களம்காண்கிறது. 

டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலியாவின் ரேடியோ ஒன்றுக்குப் பேட்டியளித்த விராட் கோலி, ``கடந்த முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகான இந்த 4 ஆண்டுகளில் பெற்ற அனுபவம் மற்றும் அணி விளையாடிய விதத்தைப் பார்க்கையில், வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல அந்த அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். 

ஒன்றிரண்டு போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு, அதைக் கைப்பற்றுவதே நோக்கம். மைதானத்தில் திறமையாகவும் சிறப்பாகவும் செயல்படுவோம். ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்லும் திறன் எங்களுக்கு இருக்கிறது என்றே நாங்கள் நம்புகிறோம். அதேபோல், யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.