வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (02/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (02/12/2018)

`உலகக் கோப்பை தொடரில் தோனி இருக்க வேண்டும்!’ - ஃபிளமிங் கருத்து

2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியில் மகேந்திரசிங் தோனி சேர்க்கப்பட வேண்டும் என நியூஸிலாந்து முன்னாள் வீரரும், சிஎஸ்கேவின் பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃபிளமிங் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

தோனி

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதேபோல், நடப்பாண்டில் இதுவரை 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 275 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடுவரா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில், நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃபிளமிங், 2019ம் உலகக் கோப்பை தொடரில் தோனி விளையாட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய பிளமிங், ``தோனியின் இருப்பு பெரும் பலம் என்பதால், அவரை பிளேயிங் லெவனில் சேர்ப்பதற்கான நிறைய வாய்ப்புகள் இந்திய அணியில் இருக்கின்றன. கடந்த ஐபிஎல் தொடரில் அவரின் பேட்டிங் வழக்கம்போல் சிறப்பாக இருந்தது. அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட அவருக்கு நம்பிக்கை தேவை. சர்வதேச போட்டிகள் போன்ற வாய்ப்பை அவர் எதிர்நோக்கி இருப்பார்’’என்றார்.