வெளியிடப்பட்ட நேரம்: 02:21 (03/12/2018)

கடைசி தொடர்பு:08:33 (03/12/2018)

`விராட் கோலிக்கு நிச்சயம் டஃப் கொடுப்போம்’ - டிராவிஸ் ஹெட் உறுதி!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 'கேப்டன் விராட்கோலிக்கு டஃப் கொடுக்க எங்கள் மூன்று பந்துவீச்சாளர்கள் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர்' என ஆஸ்திரேலிய வீரர் டிராவிட் ஹெட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடிவருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடர் ட்ரா ஆனது. இதையடுத்து, வரும் 6-ம் தேதி, ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன. இந்தப் போட்டிக்கு இரு அணிகளும் தயாராகிவருகின்றன. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்பது எளிதானதல்ல. அதற்கான பயிற்சிகளில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, பல்வேறு சாதனைகளை முறியடித்துவரும் வீராட் கோலி, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் என நம்பப்படுகிறது.

டிராவிட் ஹெட்

PC : CRICBUZZ

இந்நிலையில், 'விராட் கோலியை எங்கள் பௌலர்கள் கட்டுப்படுத்துவார்கள்' என ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், ``எங்கள் அணியின் பௌலர்களான, ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் கடுமையான பயிற்சிகளை எடுத்துவருகின்றனர். அவர்களால் விராட் கோலியை கட்டுப்படுத்தி, போதுமான நெருக்கடியைக் கொடுக்க முடியும். இந்த உலகத்தில் எல்லோரும் மனிதர்கள்தானே. விராட்கோலியை முதன்முதலில் பெங்களூருவில்தான் சந்தித்தேன். அவர் ஒரு சிறந்த வீரர்.  ஆனால், அவரை வீழ்த்தும் அளவிற்கான பந்து வீச்சாளர்களை நாங்கள் பெற்றுள்ளோம். மூன்று பேரும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சுக் குழு. மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கப்போகிறது. நாங்கள் இந்தியாவை வீழ்த்தி, போட்டியில் முன்னணி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.