வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:07:43 (03/12/2018)

`இவர்தான் தோனியின் டான்ஸ் மாஸ்டர்’ - வைரலாகும் க்யூட் வீடியோ!

மகேந்திர சிங் தோனிக்கு அவரது மகள் ஸிவா தோனி டான்ஸ் கற்றுக்கொடுக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

தோனி

ஹார்ட் பீட் அதிகரிக்கும் ஆடுகளத்திலும், எப்படி இந்த மனிதர் இவ்வளவு கூலாக இருக்கிறார் என்று வியப்படையச்செய்பவர் தோனி. கிரிக்கெட்டில் எப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும் தன் முக்கத்திலும், உடலிலும் பதட்டத்தை வெளிப்படுத்தாதவர். ஜாலியான மனிதரும் கூட. அவ்வப்போது வெற்றிக்கொண்டாட்டங்களின்போது சக வீரர்களுடன் அவர் செய்யும் சேட்டைகள் வீடியோக்களாக வெளிவரும். களத்தில் எதிரணியினருக்கு சிம்மசொப்பனமாகவும், கிரவுண்டுக்கு வெளியில் ஜாலியான மனிதராகவும் இருக்கும் தோனியின்மீது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கைக்குள் சென்றால், ஒரு தந்தையாகவும், கணவனாகவும் சிறப்பாக நேரத்தைச் செலவிட்டுவருகிறார்.  மகள் ஸிவாவுடன் தோனியிருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனி ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில், தோனிக்கு மகள் ஸிவா நடனம் கற்றுத்தருகிறார். மகள் கற்றுக்கொடுக்கும் அசைவுகளைக் கவனித்தபடியே நடனமாடுகிறார் அவர். சிறுவயதில் ஸிவா ஆடும் நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது. இதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், சாக்ஸி . `நடனமாடும்போது நாங்களும் நன்றாகத்தான் இருக்கிறோம்” என்று அதில் பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Even better when we are dancing @zivasinghdhoni006

A post shared by M S Dhoni (@mahi7781) on