வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (04/12/2018)

கடைசி தொடர்பு:07:30 (04/12/2018)

மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு ’டாட்’ -‘பாலன் டி ஓர்’ வென்றார் லூக்கா மோட்ரிச்!

2018 -ம் ஆண்டுக்கான ‘பாலன் டி ஓர்’ விருதை, குரோஷிய கால்பந்து அணியின் கேப்டனும் ரியல் மேட்ரிட் வீரருமான லூக்கா மோட்ரிச் வென்றுள்ளார்.

மோட்ரிச்

கால்பந்து உலகில் பெருமைக்கும் மரியாதைக்கும் உரியதாகக் கருதப்படும் விருது, 'பாலன் டி ஓர்'. தலைசிறந்த பத்திகையாளர்கள் வாக்களித்து, விருதுக்குரிய வீரரைத் தேர்வுசெய்வார்கள். 2007-ம் ஆண்டு முதல் லயோனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுமே மாறி மாறி, ‘பாலன் டி ஓர்’ விருதைப் பெற்றுவந்தனர். ”இவர்களை விட்டால் வேற ஆளே இல்லையா?” என்று, அதிருப்தி குரல்கள் எழுந்தவண்ணம் இருந்தன.

மெஸ்ஸி ரெனால்டோ

இப்போது, அந்த ‘வேற ஆளு’ வந்துவிட்டான். மெஸ்ஸி, ரொனால்டோவின் பத்தாண்டு ஆதிக்கத்திற்கு ‘டாட்’ வைத்து, 2018-ம் ஆண்டுக்கான ’பாலன் டி ஓர்’ விருதை வென்றிருக்கிறார், குரோஷியாவின் லூக்கா மோட்ரிச். 

லூக்கா

’குட்டி நாடு’ குரோஷியாவை, உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்று, உலகம் முழுக்க அறியவைத்தவர், மோட்ரிச். அதுமட்டுமில்லாமல், ரியல் மேட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப் அடிப்பதற்கும், உறுதுணையாக இருந்தவர். 'மோட்ரிச் இந்த விருதுக்குத் தகுதியானவர்' என்று சகவீரர்கள் பாராட்டியுள்ளனர். கால்பந்து ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.