ஆட்டநாயகன் விருதை இளவயது கோலிக்கு விட்டுக்கொடுத்த ஜென்டில்மேன் கம்பீர்! #ThankYouGambhir #ViralVideo | video of gautam gambhir handed his Man of the Match trophy to a young virat kohli goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (05/12/2018)

கடைசி தொடர்பு:15:24 (05/12/2018)

ஆட்டநாயகன் விருதை இளவயது கோலிக்கு விட்டுக்கொடுத்த ஜென்டில்மேன் கம்பீர்! #ThankYouGambhir #ViralVideo

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக, கவுதம் கம்பீர் (37) நேற்று அறிவித்துள்ளார். இதையடுத்து அவரை கிரிக்கெட் ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட்டின் ஆகச் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கவுதம் கம்பீர். கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட்டில் தடுமாறி வந்த நிலையில் நேற்று தனது ஓய்வை முறைப்படி அறிவித்தார். ``இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியபோது நம்பிக்கையுடன்தான் இருந்தேன். ஆனால், அனைத்துப் போட்டிகளும் மோசமான அனுபவமாக முடிந்தது. அப்போதே, `இது முடிந்துவிட்டது கவுத்தி’ என்ற எண்ணம் எனக்குள் எழுந்துவிட்டது. இப்போது முடிவெடுத்துவிட்டேன். கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்திருந்தார். 

ஓய்வை அடுத்து அவரை கிரிக்கெட் ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அவரை வழியனுப்பும் விதமாக #GautamGambhir #ThankYouGambhir என்ற ஹேஸ்டேக் மூலமாக ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து இந்த ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் நேற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்தன. இதற்கிடையே, கம்பீர் குறித்த நினைவலைகளையும், அவரின் சிறந்த ஆட்டங்களையும் வலைதளங்களில் பார்க்க முடிகிறது. 50 ஓவர் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் அவர் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்த வீடியோவைப் பார்க்க நேர்ந்தபோது, அவரின் மற்றொரு வீடியோவும் கண்ணில் பட்டது. 

2009ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கான 316 ரன்களை கம்பீர் - விராட் கோலி ஜோடி எளிதாக சேஸ் செய்தது. இந்தப் போட்டியில் கம்பீர் 150 ரன்களும், கோலி 107 ரன்களும் எடுத்தனர். ``மேன் ஆஃப் தி மேட்ச்'' விருதுக்குக் கம்பீர் அழைக்கப்பட்டார். ஆனால் அதனை அவர் வாங்க மறுத்து ஒருநாள் போட்டியில் முதல் முறையாகச் சதம் அடித்த கோலிக்கு விருதை அளிக்குமாறு பரிந்துரைத்து நெகிழவைத்தார். அதன்படி, `மேன் ஆஃப் தி மேட்ச்' விருது கோலிக்கு அளிக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close