வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (05/12/2018)

கடைசி தொடர்பு:15:50 (05/12/2018)

கிரிக்கெட்டராக மட்டுமல்ல நல்ல மனிதராகவும் ஜொலித்தவர் கவுதம் கம்பீர்! #OrganDonar

ந்தியாவின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை, ஆந்திராவுக்கு எதிராக விளையாடப் போகும் ரஞ்சிப் போட்டிதான், கம்பீர் விளையாட இருக்கும் கடைசிப் போட்டி. 

கவுதம் கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்குப் பிறகு பேர் சொல்லும்படியான இடது கை தொடக்க ஆட்டக்காரர் இவர் மட்டுமே. இந்திய மைதானங்களில் மட்டுமல்லாது, வெளிநாட்டு மைதானங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணி, சிறிய அணி என்றில்லாமல் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அசத்தலாக ஆடியவர். நிதானமாக ஆட வேண்டிய நேரங்களில் நிதானமாகவும், அடித்து ஆட வேண்டிய பந்துகளை அடித்து ஆடுவதிலும் கவுதம் கம்பீர் கில்லாடி. 2011-ம் ஆண்டில் நடந்த ஐம்பது ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும், 2007-ம் ஆண்டு டிவென்டி - டிவென்டி உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்திய அணி கோப்பை வெல்லக் காரணமாக இருந்தவர். 

ஒரு கிரிக்கெட்டராக இவை எல்லாம் இவரின் பேர் சொல்லும் விஷயங்கள். ஒரு மனிதராக இவர் செய்த மகத்தான காரியம் ஒன்றும் இருக்கிறது. தான் இறந்த பிறகு தன் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக உறுதியளித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்தான். 2011- ம் ஆண்டு டெல்லியில் நடந்த விழா ஒன்றில் அதற்கான அறிவிப்பைச் செய்தார் அவர். தன் அணி நண்பர்களிடமும் இது குறித்துப் பேசுவேன் என அப்போது உறுதியளித்திருந்தார்.

உடல் உறுப்பு தானம்

``உடல் உறுப்புகள் தேவையால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறந்து போகிறார்கள். வளர்ந்த நாடுகளில் உடல் தானம் குறித்து நல்ல விழிப்பு உணர்வு இருக்கிறது. அதிகமானோர் தானம் செய்து வருகிறார்கள். நம் நாட்டில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு உடல் உறுப்புகள் தேவைப்படுகின்றன. ஆனால், அதில் பத்து சதவிகித உறுப்புகள் மட்டுமே தானமாகக் கிடைக்கின்றன. ஊடகங்கள் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவருமே உடல் தானம் செய்ய முன்வர வேண்டும்`` என்ற கோரிக்கையை முன் வைத்தார் அவர்.

கிரிக்கெட்டராக மட்டுமல்லாது சக மனிதனின் துயரங்களைக் கண்டுகொண்ட நல்ல மனிதராகவும் ஜொலித்தார் அவர். கிரிக்கெட்டை விட்டுச் சென்றாலும் மனித நேயத்தை, உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்துகிற ஒவ்வொருவரின் மனதிலும் எப்போதும் நிலைத்து நிற்பார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க