வெளியிடப்பட்ட நேரம்: 05:33 (06/12/2018)

கடைசி தொடர்பு:08:56 (06/12/2018)

டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்தியா? - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங் தேர்வு! #AUSvIND

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்துள்ளது.

இந்தியா

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர், 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், தற்போது 4 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்திய அணி, கோலி தலைமையில் வலிமையாகவே இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா, வார்னரும் ஸ்மித்தும் இல்லாததால் கொஞ்சம் பலவீனமாகவே காணப்படுகிறது. ஃபிஞ்ச், ஹெட் போன்ற டி20 பிளேயர்ஸ்களே அதிகம் உள்ளனர். ஆனாலும், கம்மின்ஸ் , ஸ்டார்க் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தலாம். அவர்களை சமாளிப்பதில்தான் இந்திய அணியின் வெற்றி அடங்கி இருக்கிறது. 

கோலி

 

அணி விவரம் ;

இந்தியா: முரளிவிஜய், கே.எல். ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோஹித் ஷர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிம் பெய்ன் (கேப்டன்) , ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ்.