’கழன்ற ஷூ... போன விக்கெட்...’ - ‘அன்லக்கி’ பாகிஸ்தான் பௌலர் | Pakistan bowler yashr shah loses his shoe

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (06/12/2018)

கடைசி தொடர்பு:08:10 (06/12/2018)

’கழன்ற ஷூ... போன விக்கெட்...’ - ‘அன்லக்கி’ பாகிஸ்தான் பௌலர்

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, அபுதாபியில் நடந்துவருகிறது. முதல் இன்னிங்ஸில், நியூஸிலாந்து 274 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 89 ரன் எடுத்தார். மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய பாகிஸ்தான், 348 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான்

இந்த ஆட்டத்தின் மூன்றாவது செஷனில், கேப்டன் சர்ஃபராஸும், சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷாவும் ஆடிவந்தார்கள். அப்போது, சோமர்வில்லே வீசிய பந்தை சர்ஃபராஸ் லெக் திசையில் அடித்துவிட்டு ஓடினார். மறுமுனையில் யாஷிர் ஷாவும் ஓடிவந்தார். இரண்டாவது ரன்னுக்கு திரும்பும்போது, யாஷிர் ஷாவின் ஷூ கழன்றது. இதனால், சரியாக ஓடமுடியாமல் அவர் ரன் அவுட் ஆனார். கடைசிக்கட்டத்தில், அவர் அடித்த டைவும் வீணானது. சர்ஃபராஸ் ஷூ கழன்றதைச் சுட்டிக்காட்டி , ‘அவுட் கொடுக்கக் கூடாது’ என்று, அம்பயரிடம் முறையிட்டார். ஆனால் அம்பயர், ‘அவுட் கொடுத்தது கொடுத்ததுதான்’ என்று கைவிரிவித்துவிட்டார். 1 ரன்னுடன் வெளியேறினார், யாஷிர் ஷா. இந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

 


[X] Close

[X] Close