`களத்தில் என்னைச் சீண்டினால்...' - என்ன சொல்கிறார் புஜாரா | Get Motivated If They Try To Sledge Me - Pujara

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (06/12/2018)

கடைசி தொடர்பு:18:20 (06/12/2018)

`களத்தில் என்னைச் சீண்டினால்...' - என்ன சொல்கிறார் புஜாரா

``என்னைச்  சீண்டினால் சோர்வடைய மாட்டேன். அதை உத்வேகமாகக் கொண்டு செயல்படுவேன்'' என இந்தியக் கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.

புஜாரா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புஜாராவின் சதத்தால் இந்திய அணி கெளரவமான ரன்களை எடுத்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் புஜாரா தனி ஆளாகச் சதம் விளாசி அசத்தினார்.

கிரிக்கெட்

முதல் நாள் ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புஜாரா, ``களத்தில் இருக்கும்போது எதிரணியினர் என்னைச் சீண்டினால் நான் அதுகுறித்து கவலைப்படுவதே இல்லை. அதை உத்வேகமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடுவேன். பேட்ஸ்மேன்களை குறை சொல்லமாட்டேன். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. நீண்ட நேரம் களத்தில் இருந்ததால் பந்து எவ்வாறு வந்தது என்பது எனக்குத் தெரியும். களத்தின் தன்மை குறித்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தெரிவிப்பேன். போட்டியை டிவி-யில் பார்க்கும்போது எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் எனத் தோன்றலாம். உண்மையில் அது அவ்வளவு எளிதானது அல்ல. என்னுடைய அனுபவத்தைக் களத்தின் தன்மை குறித்து வேகப்பந்துவீச்சாளர்களுக்குக் கூறுவேன். இது ஒன்றும் மோசமான ஸ்கோர் இல்லை” என்றார்.


[X] Close

[X] Close