வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:19:02 (06/12/2018)

இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்!

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

யாஷிர் ஷா

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து வீரர்  வில்லியம் சோமர்வில்லே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இந்தச் சாதனையை தனது 33-வது போட்டியில் நிகழ்த்தியுள்ளார். சுமார் 82 ஆண்டு கால சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

கிரிக்கெட்

1936-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் கிலேரி ஃகிரிம்மெட் தனது 36-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக இருந்தது. இதை தற்போது யாஷிர் ஷா முறியடித்துள்ளார்.

இந்ததொடரில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் யாஷிர் ஷா  இதுவரை 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறுகிய காலத்தின் பாகிஸ்தானின் தவிர்க்கமுடியாத சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவாகியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது அவரது சிறந்த தரநிலையாகும்.
 

அஸ்வின்

இந்தியக் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 37-வது போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஒரு போட்டியில் இந்த சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை அஸ்வின் இழந்திருந்தார்.