`என் அனுபவத்தில் இப்படி விளையாடிப் பார்த்ததில்லை'- ஆஸி. வீரர்கள் குறித்து சச்சின் | The defensive mindset by the Aussie batsmen at home is something I’ve not seen before in my experience says sachin

வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (07/12/2018)

கடைசி தொடர்பு:13:33 (07/12/2018)

`என் அனுபவத்தில் இப்படி விளையாடிப் பார்த்ததில்லை'- ஆஸி. வீரர்கள் குறித்து சச்சின்

``என் அனுபவத்தில், ஆஸ்திரேலிய அணி இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை'' என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்

photo credit: @ICC

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல்டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நடந்துவருகிறது. முதல் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 250 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே, ஹேசல்வுட் பந்தில் இந்திய வீரர் ஷமி அவுட்டானார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சிகொடுத்தனர். 

இஷாந்த்

photo credit: @ICC

தொடக்க வீரராகக் களமிறங்கிய ஆரோன் பிஞ்சை முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே அவுட்டாக்கி வெளியேற்றினார், இஷாந்த் ஷர்மா.  அதன்பின் ஹாரிஸ், கவாஜா சில நிமிடங்கள் நீட்டித்து விளையாடினாலும், அவர்கள் நிலைத்து ஆடாமல் பார்த்துக்கொண்டார் அஸ்வின். சீரான இடைவெளியில் ஹாரிஸ், கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். 

இதற்கிடையே, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், தொடக்க ஆட்டக்காரர்கள் உட்பட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். தடுப்பு ஆட்டத்தைக் கையாண்டுவருவதால், ஆமை வேகத்தில் அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்துவருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் தடுப்பு ஆட்டம்குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்

photo credit: @ICC

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``இந்திய வீரர்கள் இந்த சூழ்நிலையில் மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும். குறிப்பாக நீங்கள் உங்கள் பிடியை இழக்கக் கூடாது. தற்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விளையாடி வரும் தடுப்பு ஆட்டத்தை என் அனுபவத்தில் இதுவரை நான் பார்த்ததில்லை. அஸ்வின் சிறப்பாக விளையாடிவருகிறார். அவரின் ஆட்டத்தால் இந்தியா முன்னிலை வகிக்கும்"  எனக் கூறியுள்ளார். 

சச்சின் டெண்டுல்கர்

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. அந்த அணியின் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 61 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இந்திய அணியைவிட 59 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும், பும்ரா, இஷாந்த் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close