வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (08/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (08/12/2018)

அஷ்வின்தான் துருப்புச்சீட்டு - பும்ரா ஒபன் டாக்

இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் சிறப்பாகச் செயல்படுவார் என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு இஷாந்த் மூன்றாவது பந்திலே அதிர்ச்சி கொடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். கோலி அஸ்வினை களமிறக்கினார். கோலியின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்த அஷ்வின் அதிகப்படியான ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

அஷ்வின்

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு இப்படி ஒரு நிலைமையா என்பது போல் அவர்களது பேட்டிங் இருந்தது. தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர் இதனால் ரன் வேகம் மந்தமானது. புதிய பந்து எடுத்ததும் பும்ரா தனது பங்குக்கு தாக்குதலை தொடுத்தார். மூன்றாவது நாள் தொடக்கத்தில் எஞ்சியிருந்த விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணி 235-க்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவில் வேகம், சூழல் தாக்குதலில் ஆஸ்திரேலியா வீரர்கள் நிலைகுலைந்து போனார்கள்.

இதனையடுத்து மூன்றாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில்  3விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப்போட்டியில் இந்திய அணி 166 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, “ இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் சிறப்பாகசெயல்படுவார். கடினமான சூழலை நாதன் லயன் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அஷ்வின் அனுபவம் வாய்ந்த வீரர் அவருக்கு எப்படிச் செயல்பட வேண்டும் எனதெரியும். அதற்கான பணிகளில் கண்டிப்பாக ஈடுபடுவார்.  இந்தப்போட்டில் சிறப்பான பங்களிப்பை அவர் அளிப்பார்.

இந்திய அணி

ஆஸ்திரேலியா அணியின் டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன்களை விரைவில் வீழ்த்தி விட்டோம். 4-ம் நாள் ஆட்டத்தின் முதல் பாதி மிகவும் முக்கியமானது. நாளை நாங்கள் ஆதிக்கம் செலுத்தினால் இந்தப்போட்டியில் சிறப்பான இடத்தை அடைவோம்.

நான் சிறப்பாக செயல்படுவதில் எந்த ரகசியமும் இல்லை. சக வீரர்களிடம் ஆலோசனைகள் பெறுவேன். இதற்கு முன்பு இங்கு விளையாடிய வீரர்களிடம் களத்தின் தன்மை குறித்து கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்படுவேன். இங்கிலாந்தில் நான் விளையாடவில்லை வலைபயிற்சியில் மட்டுமே ஈடுபட்டேன் ஆனால் போட்டியின் போது என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தேன். ஒரு நாள் போட்டிகளில் அதிகமாக விளையாடியது எனக்கு உறுதுணையாக உள்ளது. 

பும்ரா

இந்ததொடரில் யாரிடமும் அதிகமாக ஆலோசனைகள் பெறவில்லை ஆனால் முந்தைய ஆட்டங்களைக் கவனித்தேன். அதில் எவ்வாறு விக்கெட்டுகள் வீழ்ந்தது என்பது குறிந்து தெரிந்துகொண்டேன். அதனை நான் தற்போது களத்தில் முயற்சி செய்துவருகிறேன்.

புஜாரா

புஜாரா 123 ரன்கள் தான் எங்களை  இந்தப்போட்டியில் முன்னிலை பெற செய்தது. அவருக்குத் தனது வலிமை குறித்து நன்கு தெரியும். எந்த பந்தை எப்படிக் கையாள வேண்டும் எது தேவையில்லாத பந்து என்பதை நன்கு அறிந்தவர். அதே ஆட்டத்தை நாளையும் அவர் வெளிப்படுத்துவார் என நம்பலாம். எனத் தெரிவித்தார்.