வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (12/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (12/12/2018)

ஒரே இன்னிங்ஸில் 3 ஹாட்ரிக்... 10 விக்கெட்... அசத்திய மணிப்பூர் இளம் வேகம்

உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளைச் சாய்த்து அசத்தியுள்ளார்.

கிரிக்கெட்

19 வயதுக்குட்பட்டோருக்கான கூச்பெகர் டிராபி கிரிக்கெட் போட்டி ஆந்திராவில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், முதலில் ஆடிய அருணாச்சலப்பிரதேச அணி, தனது முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய மணிப்பூர் அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 122 ரன்களுக்கு சுருண்டது. 16 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அருணாச்சலப்பிரதேச அணிக்கு, மணிப்பூர் வீரர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் (18) அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

ராஜ்குமார்

இவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அருணாச்சல் அணி வீரர்கள் திணறினர். இடக்கை பந்துவீச்சாளரான ராஜ்குமாரின் துல்லியமான அட்டாக்கிங்  காரணமாக, 36 ரன்களில் சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 9.5 ஓவர்கள் வீசிய ராஜ் குமார் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 10விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 3 மெய்டன் ஓவர்கள். 10 விக்கெட்டில் 3 ஹாட்ரிக் என அசத்தியுள்ளார். இவரது பந்துவீச்சில் 5 பேட்ஸ்மேன்கள் ஸ்டெம்புகளைப் பறிகொடுத்தனர். 2 எல்.பி.டபிள்யூ, மூன்று வீரர்கள் கேட்ச் கொடுத்து வெளியேறினர். ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளைச் சாய்த்து அசத்தியுள்ளார் இந்த இளம்வீரர் .பின்னர் ஆடிய மணிப்பூர் அணி, 7.5 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது