வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (13/12/2018)

கடைசி தொடர்பு:10:31 (13/12/2018)

அஷ்வின், ரோகித் அவுட்... வெளியானது 2-வது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட பட்டியல்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13 வீரர்கள் கொண்ட பட்டியலை இந்திய அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அஷ்வின் காயம் காரணமாக விளையாடவில்லை. 

அஷ்வின்

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலகின் அதிவேகமான ஆடுகளங்களில் ஒன்றான பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சொர்க்கம் என்றே சொல்லலாம். இந்தப் போட்டியில் நிச்சயமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிகிறது. 

இந்திய அணி

இந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் நாளை விளையாடவுள்ள 13 வீரர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அஷ்வின் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அஷ்வின் அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகத் தான் பார்க்கப்படுகிறது. அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். 

ஜடேஜா

அதேபோன்று ரோகித் ஷர்மாவும் முதல் போட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஹனும விஹாரி களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. பயிற்சிப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காத ப்ரித்வி ஷா, காயம் சரியாகாத காரணத்தால் இரண்டாவது போட்டிக்கான அணியிலும் இடம் பெறவில்லை. ராகுல் மற்றும் விஜய் மீண்டும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

இந்திய அணி அறிவித்துள்ள 13 வீரர்களின் பட்டியல்:

விராட் கோலி (கேப்டன்), விஜய், ராகுல், புஜாரா, ரஹானே, விஹாரி, பன்ட், ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்