`ஜடேஜாவின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள்தாம்!’ - ரகசியம் உடைத்த பி.சி.சி.ஐ | Special Meet - Jaddu's best friends are Horses

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (13/12/2018)

கடைசி தொடர்பு:16:40 (13/12/2018)

`ஜடேஜாவின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள்தாம்!’ - ரகசியம் உடைத்த பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர் ஜடேஜா குதிரைகளுடன் இருக்கும் வீடியோவை பி.சி.சி.ஐ பதிவிட்டுள்ளது.

ஜடேஜா

ரவீந்தர் ஜடேஜாவுக்கு விலங்குகள் என்றால் நிறைய பிரியம். அவரது ட்விட்டர் இன்ஸ்டாகிராம் பதிவுகளைப் பார்த்தாலே தெரியும். செல்ஃபி வித் லயன், லவ் ஹார்ஸ் என்ற ஹேஷ்டேக்குடன் ஏராளமான படங்களைப் பதிவிட்டிருப்பார். குதிரைகளுடன் அதிக நேரம் செலவிடக்கூடிய அவர் ஒரு குதிரைப் பிரியர் என்றே சொல்லலாம். தன் கைகளில் குதிரையின் டாட்டூ போட்டுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஜடேஜாவும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். டி-20 தொடர் மற்றும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

குதிரை

ஆஸ்திரேலியா சென்ற ஜடேஜா இது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தனக்குப் பிடித்தமான குதிரைகளுடன் தனது நேரத்தைச் செலவிட ஆரம்பித்தார். அடிலெய்டில் தரையிறங்கியதும் மீட் மை நீயூ ஃப்ரண்ட் எனக் குதிரையுடன் ட்விட்டரில் பதிவிட்டார். அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் தயாராகி வருகிறார்கள் இதற்கிடையில் இந்திய அணியின் உள்ளூர் தொடர்பு அதிகாரியான கிரேக் நியூட்டன் இல்லத்துக்கு விசிட் அடித்தார் ஜடேஜா. விஷயம் என்னவென்றால் நீயூட்டன் இல்லத்தில் நிறையக் குதிரைகள் உள்ளது அதனுடன் நேரத்தை செலவிட புறப்பட்டுவிட்டார். ஜடேஜா குதிரைகளுடன் இருக்கும் வீடியோவை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கிரிக்கெட்


குதிரைப் பிரியரான ஜடேஜா கூறுகையில், நீங்கள் குதிரை பற்றி தேடத் தொடங்கினால் அதற்கு முடிவே இல்லை. அது வேறு ஒரு உலகம். அவை மிகவும் நம்பகமான உயிரினம் என்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை நடைபெறுகிறது. வேகப்பந்துவீச்சு சாதமான இந்த பிச்சில் இந்திய அணி பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. முதல் டெஸ்டில் சிறப்பாகச் செயல்பட்ட அஷ்வினுக்குப் பதிலாக இந்த டெஸ்டில் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.