வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (14/12/2018)

கடைசி தொடர்பு:10:00 (14/12/2018)

பெர்த் ஆடுகளத்தில் இவர்தான் எங்கள் சாய்ஸ் - ட்விட்டரில் ரசிகர்கள் ஜாலி ரகளை

புற்கள் நிறைந்த பெர்த் ஆடுகளத்தில், ஆடும் லெவனில் இவர்தான் எங்கள் சாய்ஸ் என ட்விட்டர்வாசிகள் ட்வீட் செய்து வருகின்றனர்.  

பெர்த் மைதானம்

Photo credit: BCCI

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், இவ்விரு  அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.

ஆடுகளம்

Photo credit: BCCI

வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான இந்த பிட்சில் இந்திய அணி முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. முதல் டெஸ்டில் விக்கெட்டுகளை அள்ளிய அஸ்வினுக்குப் பதிலா உமேஷ் யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார். பெர்த் ஆடுகளத்தில் புற்கள் நன்கு முளைத்து ஆடுகளமே பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது.

ஃபெடரர்

ஆடுகளம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் சிலர் இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஆடும் லெவனில் என்னுடைய சாய்ஸ் `ரோஜர் ஃபெடரர்’ எனக் குறும்பாக தெரிவித்துள்ளனர்.டென்னிஸில் புல் தரையின் நாயகன் என வர்ணிக்கப்படும் ஃபெடரர் தனி ராஜாங்கமே நடத்துகிறார். இவரது மின்னல் வேக ராக்கெட்டுகளை சமாளிக்க முடியாமல் எதிராளி சரண்டர் ஆகிவிடுவார். இதன் காரணமாகவே சிலர் பெர்த் ஆடுகளத்தையும் ரோஜர் ஃபெடரரையும் இணைத்து ட்வீட் செய்து வருகின்றனர்.