சர்ப்ரைஸ் விஹாரி... முதல் நாளில் ஆஸ்திரேலியா நிதானம்! #AusvInd | Border-Gavaskar Trophy- Stumps on Day 1 of the 2nd Test Australia 277/6

வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (14/12/2018)

கடைசி தொடர்பு:16:22 (14/12/2018)

சர்ப்ரைஸ் விஹாரி... முதல் நாளில் ஆஸ்திரேலியா நிதானம்! #AusvInd

ஆஸ்திரேலியா

Credits: BCCI

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்  போட்டி, பெர்த்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன், பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா அணியில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை இந்திய அணியில் மட்டும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. காயம் காரணமாக, அஷ்வின் மற்றும் ரோகித் ஷர்மா நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஹனும விஹாரி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர். இந்தப் போட்டியிலும் சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இஷாந்த் ஷர்மா, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி என வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது.

டாஸ்

Credits: BCCI

ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை ஆரோன் பின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் தொடங்கினார். முதல் டெஸ்ட் போட்டியில், ஆரோன் பின்சை பந்துவீச்சால் மிரட்டிய  இஷாந்த் ஷர்மா, முதல் ஓவரை வீசினார். ஆரோன் பின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஜோடி முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தவில்லை.  வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த பிட்சில், இருவரும் பொறுப்புடன் விளையாடினர். தேவையில்லாத பந்துகளை இவர்கள் தொடவே இல்லை.  ஆஸ்திரேலியா  அணிக்கு இந்த ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர்.

இஷாந்த் ஷர்மா

Credits: BCCI

இந்திய வீரர்களின் பொறுமையைச் சோதித்த இந்த ஜோடியை பும்ரா பிரித்தார்.  பும்ரா வீசிய 36 ஓவரின் முதல் பந்தை ஆரோன் பின்ச்  எதிர்கொண்டார்  அந்தப் பந்தில், பும்ரா எல்.பி.டபிள்யு அப்பீல் செய்தார்.  ஆனால், பந்து சற்று உயரமாகச் சென்றதால் அவுட் வழங்கப்படவில்லை.  ஆனால், அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டானார்.  அப்போது, ஆஸ்திரேலியா அணி 112 ரன்கள் எடுத்திருந்தது.

பும்ரா

மார்கஸ் ஹாரிஸுடன் உஸ்மான் கவாஜா  இணைந்தார். ஆனால், இந்த ஜோடியை நீண்ட நேரம் விளையாட இந்திய வீரர்கள் அனுமதிக்கவில்லை. 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடன் கேட்ச் கொடுத்து உஸ்மான் கவாஜா வெளியேறினார். தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஹாரிஸை பகுதி நேரப் பந்துவீச்சாளர் ஹனும விஹாரி வெளியேற்றினார்.      70 ரன்கள் எடுத்திருந்த நிலையில்,  மார்கஸ் ஹாரிஸ் இவரது பந்துவீச்சில் ரஹேனேவிடம் கேட்ச்  கொடுத்து வெளியேறினார்.  ஆஸ்திரேலியாவின் பிடி மெள்ளத் தளர ஆரம்பித்தது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. ஷான் மார்ஸ் 45, ஹேட்  58 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா

இந்தியா தரப்பில் ஹனுமா விஹாரி, இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பும்ரா, உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்  எடுத்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்களிடம் சரண்டரான ஆஸ்திரேலியா வீரர்கள், இரண்டாவது போட்டியில்  கடுமையாகப் போராடிவருகின்றனர்.