`நீங்கள் தான் பதில் கூற வேண்டும்; நான் இல்லை' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு `ஷாக்' கொடுத்த இஷாந்த் ஷர்மா! | Ishant Sharma takes a jibe at Australian media On no balls issue

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (16/12/2018)

கடைசி தொடர்பு:09:00 (16/12/2018)

`நீங்கள் தான் பதில் கூற வேண்டும்; நான் இல்லை' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு `ஷாக்' கொடுத்த இஷாந்த் ஷர்மா!

ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷாந்த் ஷர்மா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி  2-ம் நாள் ஆட்ட நேர முடிவில்  3 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது. முன்னதாக அடிலெய்டில் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இஷாந்த்

இந்தப் போட்டியின் போது இரு இன்னிங்ஸிலும் சேர்த்து இஷாந்த் ஷர்மா மொத்தம் ஐந்து நோ-பால்களை வீசியிருந்தார். இதில் சில அம்பயர்களின் கவனக்குறைவால் கண்டுகொள்ளப்படவில்லை. இது ஆஸ்திரேலிய ஊடகங்களால் பெரிதாக பேசப்பட்டது.  ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன்  ரிக்கி பாண்டிங் கூட, “களநடுவர்கள் தங்கள் முன்னால் இருக்கும் கோடுகளை கவனிப்பதே இல்லை. பல வருடங்களாக இப்படி தான் நடக்கிறது. சமீப காலமாக ரீவ்யூ கேட்டுத் தான் நோபாலை தெரிந்துகொள்ளமுடிகிறது” என்று கடுமையாக சாட்டியிருந்தார். 

இஷாந்த் ஷர்மா

இதற்கிடையே இரண்டாவது பெர்த்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா. அப்போது ஆஸ்திரேலிய நாட்டு ஊடகங்கள் அவரிடம் அதிகமாக நோ-பால் வீசுவது குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த இஷாந்த், ``இதற்கு நான் பதில் கூற வேண்டியது இல்லை. ஆஸ்திரேலிய ஊடகங்களாகிய நீங்களே இந்தக் கேள்விக்கு பதில் கூற வேண்டும் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். 

இஷாந்த்

அதில் இது போன்ற விஷயங்கள் நடக்கின்றன. மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான். நான் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இக்கட்டான சூழ்நிலையில் அதிகம் விக்கெட்டுகள் எடுக்கவே விரும்புகிறேன். சீனியர் பௌலர்கள் கடந்த காலங்களில் இக்கட்டான சூழ்நிலையில் பந்துகளை தங்கள் கைகளில் வைத்திருப்பார்கள். அப்போது எனக்கு அது புரியவில்லை. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அதனை நான் செய்வதற்கு விரும்புகிறேன்" என்றார். 

இஷாந்த்

இதேபோல் கேப்டன் கோலி மற்றும் புஜாரா குறித்துப் பேசியவர், ``விராட் களத்தில் இருக்கும் போது எங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். அந்த நாளை நன்றாக முடிப்போம். தற்போது இந்த ஆட்டம் சமநிலைக்கு வந்துவிட்டது. நாளைய ஆட்டத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்துவோம். நான் புஜாராவுக்கு எதிராகப் பந்துவீசியுள்ளேன். எனக்குத் தெரியும் அவருக்குப் பந்துவீசுவது எவ்வளவு கடினம் என்று. அவர் பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்துவிடுவார். அவர் களத்தில் இருந்தால் கண்டிப்பாக அதிசயங்களை நிகழ்த்துவார். எப்போது புஜாரா தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடுகிறாரோ அப்போது பந்து ஸ்கொயாரை தாண்டிச் செல்லாது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க