`மோசமான தொடக்க ஜோடிகள்' - இந்தியாவுக்கு வந்த சோதனை! | Vijay-Rahul Opening Combination India's Poorest Away From Home

வெளியிடப்பட்ட நேரம்: 07:38 (18/12/2018)

கடைசி தொடர்பு:07:44 (18/12/2018)

`மோசமான தொடக்க ஜோடிகள்' - இந்தியாவுக்கு வந்த சோதனை!

ராகுல்

இந்தியாவின் மோசமான தொடக்க ஜோடிகள் பட்டியலில் கே.எல்.ராகுல் - முரளி விஜய் இணை இணைந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்த இணை ஒரு வலுவான இன்னிங்ஸை கட்டமைக்கவில்லை. டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு  தொடர்களில் மோசமான தொடக்க ஜோடிகளின் பட்டியலில் இவர்கள் இடம்பிடித்துள்ளனர். 13 போட்டிகளில் களமிறங்கியுள்ள இந்த ஜோடி 173 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக 63 ரன்களை மட்டுமே இவர்கள் சேர்த்துள்ளனர். ஒரு முறை மட்டுமே 50 ரன்களைக் கடந்துள்ளனர். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்தான் அதிகபட்ச ரன்களை இவர்கள் எடுத்துள்ளனர்.

முரளி விஜய்

அதிலும் இந்த ஆண்டில் மூன்று முறை ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்பாக 3 முறை டக்-அவுட் ஆகியுள்ளனர். இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு முறையும் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் ஒரு முறை டக்-அவுட் ஆகியுள்ளனர். ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே இந்த இணை 10 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்துள்ளது. விஜய்- ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய இன்னிங்ஸ்களில் இந்திய அணி 5 ஓவர்களில் தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் மட்டுமே இவர்கள் 18 ஓவர்கள் தாக்குப்பிடித்துள்ளனர்.

இந்தியா

முரளி விஜய் - கே.எல்.ராகுலுக்கு இது மோசமான ஆண்டாகவே பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் முரளி விஜய் ஆவரேஜ் படுமோசமாக உள்ளது. 15 இன்னிங்ஸில் 282 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரது சராசரி 18.8 ஆக உள்ளது. இதில் 3 டக்-அவுட் அடங்கும். கே.எல்.ராகுல் 22 இன்னிங்ஸில் 468 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரது சராசரி 22.28 ஆக உள்ளது. இதுகடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமைகள் இருந்தும் பல வீரர்கள் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தும் அதை இவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.