ஐந்தாவது முறையாக கோல்டன் ஷூ - ரொனால்டோவை முந்தி மெஸ்ஸி அசத்தல் | Messi claims record 5th Golden shoe award to break the tie with Cristiano Ronaldo

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (19/12/2018)

கடைசி தொடர்பு:09:05 (19/12/2018)

ஐந்தாவது முறையாக கோல்டன் ஷூ - ரொனால்டோவை முந்தி மெஸ்ஸி அசத்தல்

பிரபல அர்ஜென்டின கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி கடந்த கால்பந்து சீசனில் (2017-2018) நடந்த ஐரோப்பா லீக்குகளில் ஆடிய வீரர்களிலேயே அதிக கோல்கள் அடித்ததற்காக ஐந்தாவது முறையாக ஐரோப்ப கோல்டன் ஷூ விருதை நேற்று பெற்றார். 

மெஸ்ஸி

இதன்மூலம் அதிக கோல்டன் ஷூ விருதுகளைப் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ள லியோனல் மெஸ்ஸி நான்கு முறை இந்த விருதைப் பெற்றிருந்த கிறிஸ்டியனா ரொனால்டோவை முந்தியிருக்கிறார்.

மெஸ்ஸி கோல்டன் ஷூ

இவர் கடந்த சீசனில் நடந்த ஸ்பெயின் லீக்கான லா லீகா தொடரில் பார்சிலோனா அணிக்காகக் 34 கோல்கள் அடித்துள்ளார். இவருக்குப் போட்டியாக கருதப்படும் ரொனால்டோ 26 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த விருதைப் பெற்றபின் பேசிய மெஸ்ஸி, ``உண்மை என்னவென்றால் நான் தொடங்கும்போது இதெல்லாம் நடக்கும் என்று நினைத்துப் பார்த்ததுகூட கிடையாது. முக்கிய கால்பந்து தொடர்களில் ஆட வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். எனக்குக் கால்பந்து மிகவும் பிடிக்கும். ஆனால், இவ்வளவு எனக்குக் கிடைக்கும் என்று நான் கற்பனை செய்ததுகூட இல்லை" என்றார்.

ரொனால்டோ

மேலும், உலகின் மிகச்சிறந்த அணியான பார்சிலோனாவில் ஆடுவது தனது பணியை மேலும் எளிதாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது நடந்துவரும் கால்பந்து சீசனிலும் 14 கோல்களுடன் தனது ஆறாவது கோல்டன் ஷூவை குறிவைத்திருக்கிறார் மெஸ்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க