வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (19/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (19/12/2018)

`விராட் கோலி கொஞ்சம்கூட மாறவில்லை' - மிட்செல் ஜான்சன் சாடல்

`இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மரியாதை தெரியாதவர்' என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

கோலி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துவிட்டன. இந்தத் தொடரில் இரு அணிகளும் வெற்றியை நோக்கி விளையாடி வரும் அதேவேளையில் வீரர்கள் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்லெட்ஜிங் செய்வதற்கே பெயர் எடுத்து ஆஸ்திரேலிய வீரர்களே கொஞ்சம் ஒதுங்கிப்போனாலும் இந்தமுறை இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல் போட்டியில் கம்மின்ஸ் பேட் செய்யும்போது ரிஷப் பன்ட் அவரை வம்பிழுத்தது வைரல் ஆனது.

கோலி

அதேபோல் இரண்டாவது போட்டியில் இந்திய வீரர்கள் இஷாந்த் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் மைதானத்துக்குள்ளயே சண்டையிட்டுக்கொண்டனர். இதுபோதாதென்று இரு அணி கேப்டன்களுமே மோதிக்கொண்டனர். மூன்றாவது நாளின் இறுதியில் கோலி பெய்னை வம்புக்கிழுக்க, பெய்னும் பதிலடி கொடுத்தார். நான்காம் நாளின் தொடக்கத்திலும் பெய்ன் நேரே வந்து நின்று கோலி வார்த்தைப் போரில் ஈடுபட்டார். தோல்வி அடைந்தபிறகும் இரண்டுபேரும் முறைத்துப்பார்த்துக் கொண்டே இருந்தனர். 

கோலி

இதற்கிடையே, கோலியின் நடவடிக்கை முன்னாள் இந்திய வீரர்கள் உட்படப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன், இந்திய அணியின் கேப்டன் கோலியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து `ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்' செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள அவர், ``போட்டி முடிந்த பிறகு இரு அணி கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். அதன்படி இருவருமே கைகுலுக்கி கொண்டனர்.

கோலி

அப்போது டிம் பெயின் நாகரிமாக கோலியைப் பார்த்துச் சிரித்தார். ஆனால் கோலி அவரை முறைத்துப்பார்த்துக் கொண்டே சென்றார். என்னைப் பொறுத்தவரை கோலியின் இந்தச் செயல் அவமரியாதை ஆகும். உலகின் சிறந்த வீரர் என்பதால் நிறைய வீரர்களை தனக்குக் கீழாக எண்ணுகிறார். இரண்டாவது டெஸ்டில் கோலி புத்தியில்லாதவர் போல் நடந்துகொண்டார். ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பு, ``நான் மாறிவிட்டேன், நாங்கள் முதலில் ஸ்லெட்ஜிங் ஈடுபட மாட்டோம்'' என்றார். ஆனால் அப்படி அவர் நடந்துகொள்ளவில்லை.

மிட்செல் ஜான்சன்!

அவர் பேச்சுக்கும் செயல்பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்தபோது எப்படி இருந்தாரோ அப்படிதான் இன்னும் இருக்கிறார். அவருடன் நான் பழகிய அனுபவத்திலிருந்து, அவரைப் பார்த்தலிருந்து  கூறுகிறேன். கோலி இன்னும் சிறிதுகூட மாறவில்லை. இது வேதனையைக் கொடுக்கிறது. கோலியின் தற்போதைய செயல்பாடுகள் அவரின் மீதான மரியாதையையும் கெடுத்துவிட்டது" என்று கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க