`இது என்னடா ஸ்மித்துக்கு வந்த சோதனை!’ - வங்கதேசத்திலும் மறுக்கப்பட்ட வாய்ப்பு | Steve Smith Banned from Bangladesh T20 league

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (21/12/2018)

கடைசி தொடர்பு:10:12 (21/12/2018)

`இது என்னடா ஸ்மித்துக்கு வந்த சோதனை!’ - வங்கதேசத்திலும் மறுக்கப்பட்ட வாய்ப்பு

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் வங்காள தேசத்தில் நடைபெறவுள்ள பிரிமீயர் லீக்கில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஸ்மித்

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஓராண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட கடந்த ஜனவரியில் தடைவிதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது கேப்டன் பதவியும் பறிபோனது. தற்போது அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்த நிலையில்தான் வங்காள தேசத்தில் வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ள பி.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாள்களில் அணியினருடன் இணையும் முனைப்பில் ஸ்மித் இருந்தார். இந்த நிலையில்தான் ஸ்மித் பி.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு வங்காள தேசம் கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.

கிரிக்கெட்


பி.பி.எல் ஏலத்தில் ஸ்மித்தை கொமிலா விக்டோரியன்ஸ் அணி எடுக்கவில்லை. பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கைதான் அணி நிர்வாகம் எடுத்திருந்தது. சோயப் மாலிக் பி.பி.எல் தொடரின் மத்தியில் சர்வதேச அணிக்கு திரும்புவதால் மாற்று வீரராக ஸ்மித்தை ஒப்பந்தம் செய்தனர். இதற்கு மற்ற அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பி.பி.எல் தொடரில் ஸ்மித் விளையாடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிஜாமுதின், ``பி.பி.எல் விதிப்படி ஒரு அணி மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும் எனில் அவரது பெயர் வீரர்களின் ஏலத்துக்கான தொடக்க வரைவுப் பட்டியலில் இடம்பெற வேண்டும். ஸ்மித்தின் பெயர் அதில் இடம்பெறவில்லை. இதனால் மற்ற அணியைச் சேர்ந்தவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதனால் நாங்கள் ஸ்மித் விளையாடுவதற்குத் தடை விதித்துள்ளோம்" என்றனர்.