வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (23/12/2018)

கடைசி தொடர்பு:14:24 (23/12/2018)

`நீங்க எப்படி இதை நோ-பால் கொடுக்கலாம்' -  அம்பயரை வறுத்தெடுத்த வெ.இண்டீஸ் கேப்டன்!

தவறாக நோ பால் வழங்கிய அம்பயரை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கார்லோஸ் பிராத்வெய்ட் களத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டார். 

பிராத்வெய்ட்

photo credit: @HLines24

வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி தாக்காவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் கோப்பை கைப்பற்றியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்கள் எடுத்து. இரண்டாவதாக பேட் செய்த வங்கதேசம் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. முன்னதாக வங்கதேச அணி பேட் செய்து கொண்டிருந்த போது 4–வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் பௌலர் ஒஷானே தாமஸ் வீசினார். 

நோ பால்

photo credit: @HLines24

4–வது ஓவரின் 5–வது பந்தை அவர் வீசிய போது வங்கதேசத்தைச் சேர்ந்த கள நடுவர் தன்விர் அகமது ‘நோ–பால்’ என்று அறிவித்தார். டி.வி. ரீப்ளேயில் ‘நோ–பால்’ இல்லை என்பது தெரிந்தது. ஒஷானே தாமசின் கால் கோட்டுக்கு உள்ளேயே இருப்பது தெரியவந்தது. நடுவரின் தவறான கணிப்பைக் கண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் நடுவரின் தீர்ப்பால் பிரீஹிட் வழங்கப்பட்டது. பிரீஹிட்டில்  பேட்ஸ்மேன் லிட்டான் தாஸ் சிக்ஸர் விளாசினார். 

பிராத்வெய்ட்

photo credit: @HLines24

இதன்பின் 6–வது பந்தையும் நடுவர் ‘நோ–பால்’ என்று தவறாக கூறினர். இதனால் கடுப்பான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கார்லோஸ் பிராத்வெய்ட் கள நடுவர் தன்விர் அகமதுவிடம் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து நோ பால் வழங்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை நடுவர்கள் ஏற்றுக்கொள்ளாததால், பவுண்டரி எல்லைக்கோடு அருகே இருந்துகொண்டு கடும் வாக்குவாதம் செய்தார். அவருடன் மற்ற வீரர்களும் வாக்குவாதம் செய்தனர். இதனால் மைதானத்தில் அமளி ஏற்பட்டது போல் காணப்பட்டது.

பிராத்வெய்ட்

photo credit: @HLines24

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிராத்வெய்ட்டிடம் போட்டி நடுவர் ஜெப் குரோவ் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து வங்கதேச கேப்டன் ‌ஷகிப் அல் ஹசனும் சமாதானம் செய்தார். அதன்பிறகே பிராத்வெய்ட் ஆட்டத்தில் கலந்துகொண்டார். இந்த சம்பவத்தால் சுமார் 10  நிமிடம் ஆட்டம் தடைப்பட்டது. போட்டி விதிகளின் படி ஒரு முறை நோ பால் கொடுத்துவிட்டால் அதை ரிவியூ செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க