வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (24/12/2018)

கடைசி தொடர்பு:20:47 (24/12/2018)

`தோனி ரிட்டர்ன்ஸ்' - நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

இருபது ஓவர், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கடுத்தகாக நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு மூன்று டி20 போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் கலந்துகொள்ளவுள்ளது. இதற்கான இந்திய அணி விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய அணியில் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி மீண்டும் இடம்பிடித்துள்ளார். அவருடன் தற்போது ஆஸ்திரேலிய தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஹர்டிக் பாண்டியா, கேதர் ஜாதவ், ரவீந்தர ஜடேஜா, கலீல் அஹமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி-20, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி-20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தோனிக்கு வயதாகிவிட்டது. அதனால்தான் அவரை அணியில் எடுக்கவில்லை என்றும், சமீப காலமாக மோசமாக விளையாடி வருகிறார் என்றும் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், உலகக்கோப்பை வருவதால் இளம்வீரர்களுக்கு சோதித்து பார்ப்பதற்காகவும் தோனி நிறைய போட்டிகளில் விளையாடி வருவதால் மனரீதியாக ஓய்வு அளிக்கும் வகையிலும்தான் அவர் அணியில் எடுக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.  

நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், தோனி, கேதர் ஜாதவ், ஹர்டிக் பாண்டியா, குப்தீப் யாதவ், சாஹல், க்ருணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அஹமது.  

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதர் ஜாதவ், ஹர்டிக் பாண்டியா, குப்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அஹமது, முகமது ஷமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க