23 இன்னிங்ஸில் மூன்றாவது முறை... 100 ரன்களுக்குப் பின் களமிறங்கிய கோலி! #AUSvIND | Kohli entered the field after India's hundred only for third time this year

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (26/12/2018)

கடைசி தொடர்பு:13:35 (26/12/2018)

23 இன்னிங்ஸில் மூன்றாவது முறை... 100 ரன்களுக்குப் பின் களமிறங்கிய கோலி! #AUSvIND

இந்த 23 இன்னிங்ஸ்களில், 13 முறை இந்திய அணியின் ஸ்கோர் ஐம்பது ரன்களைக் கடப்பதற்கு முன்பே கோலி இறங்கியிருக்கிறார். இந்தியாவின் டாப் ஆர்டர் அவ்வளவு பலவீனமாக இருக்கிறது.

கோலி

ஆஸ்திரேலிய அணிக்கெதிராக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளைக்குப் பின் களமிறங்கினார் இந்திய கேப்டன் விராட் கோலி. அவர் களமிறங்கியபோது இந்திய அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுக்கு 123 ரன்கள். இந்த ஆண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிகளில், மூன்றாவது முறையாக இப்போதுதான் இந்திய அணி 100 ரன்களைக் கடந்தபிறகு களமிறங்கியிருக்கிறார் கோலி!

இந்தியத் தொடக்க வீரர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே சொதப்பிவருகிறார்கள். ராகுல் - விஜய், ராகுல் - தவான், விஜய் - தவான் என ஒவ்வோர் அனுபவ ஜோடியும் சொதப்பிக்கொண்டே இருக்க, ஒவ்வொரு முறையும் நெருக்கடிக்கு மத்தியில்தான் புஜாரா, கோலி இருவருமே களமிறங்கினார்கள். புஜாரா ஒருபுறம் நின்றாலும், மூன்று ஓப்பனர்களுமே விரைவில் வெளியேறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அதனால், சீக்கிரமே கோலி களத்துக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

கோலி

இந்த ஆண்டில் இன்று தன் 23-வது டெஸ்ட் இன்னிங்ஸில் களமிறங்கினார் விராட். இந்த 23 இன்னிங்ஸ்களில், மூன்றே முறைதான் இந்திய அணி 100 ரன்களைக் கடந்திருந்தது. வெளிநாட்டு ஆடுகளங்களில் அவர் களமிறங்கிய 21 இன்னிங்ஸ்களில் (2018-ம் ஆண்டில்) இதுதான் இரண்டாவது முறை! இதற்கு முன், வெளிநாட்டு ஆடுகளங்களில் இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடந்த மூன்றாவது டெஸ்டில் மட்டும்தான் இந்தியா இரண்டாவது விக்கெட்டை 100 ரன்களைக் கடந்தபிறகு இழந்தது. இன்னொரு போட்டி - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட். அந்தப் போட்டியில் கோலி களமிறங்கியபோது அணியின் ஸ்கோர் 209. 

இந்த 23 இன்னிங்ஸ்களில், 13 முறை இந்திய அணியின் ஸ்கோர் ஐம்பது ரன்களைக் கடப்பதற்கு முன்பே கோலி இறங்கியிருக்கிறார். இந்தியாவின் டாப் ஆர்டர் அவ்வளவு பலவீனமாக இருக்கிறது. பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் போன்ற வீரர்களின் வருகை இதைச் சரிசெய்தால், புஜாரா, கோலி, ரஹானே போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் நெருக்கடி இல்லாமல் விளையாடமுடியும்.

2018-ல் கோலி களமிறங்கியபோது இந்திய அணியின் ஸ்கோர்...

போட்டி

எதிரணி  இடம் இன்னிங்ஸ் கோலி களமிறங்கியபோது ஸ்கோர்
1 தென்னாப்பிரிக்கா கேப் டவுன் 1 18
      2 30
2 தென்னாப்பிரிக்கா சென்சூரியன் 1 28
      2 16
3 தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பெர்க் 1 13
      2 51
4 இங்கிலாந்து பிர்மிங்ஹாம் 1 54
      2 22
5 இங்கிலாந்து லார்ட்ஸ் 1 10
      2 13
6 இங்கிலாந்து நாட்டிங்ஹாம் 1 65
      2 111
7 இங்கிலாந்து சௌதாம்ப்டன் 1 50
      2 17
8 இங்கிலாந்து ஓவல் 1 70
      2 1
9 வெஸ்ட் இண்டீஸ் ராஜ்கோட் 1 209
10 வெஸ்ட் இண்டீஸ் ஹைதராபாத் 1 98
11 ஆஸ்திரேலியா அடிலெய்ட் 1 15
      2 76
12 ஆஸ்திரேலியா பெர்த் 1 8
      2 13
13 ஆஸ்திரேலியா மெல்போர்ன் 1 123