`பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்தின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது!' - பாண்டிங் | I was a bit shocked at some of the things says Ricky Ponting

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (27/12/2018)

கடைசி தொடர்பு:08:00 (27/12/2018)

`பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்தின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது!' - பாண்டிங்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோரின் கருத்து அதிர்ச்சி அளிப்பதாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

ஸ்மித்


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் தடையில் உள்ளனர். பான்கிராஃப்ட்டின் தடை இந்த மாதம் முடிவடையும் நிலையில், வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோரின் தடை முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கிய இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 -வது டெஸ்ட் போட்டியின் இடைவெளியில், ஸ்மித் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோரின் பேட்டிகள் ஒளிபரப்பாகின. பான்கிராஃப்ட்,  வார்னர் சொல்லித்தான் பந்தை சேதப்படுத்தியதாகவும், அணியின் வெற்றிக்காக மறுக்காமல் செய்ததாகவும் தெரிவித்தார்.

ஸ்மித்

அதேபோல ஸ்டீவ் ஸ்மித்,  `கடந்த போட்டிகளில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கடுமையாக நடந்து கொண்டது. வெற்றிபெறத்தான் சம்பளம் தரப்படுகிறது. சும்மா விளையாடினாலே போதும் என்பதற்காக நாங்கள் செலவு செய்யவில்லை என்றது. இந்த அழுத்தம்தான் பந்தை சேதப்படுத்தக் காரணமாக இருந்தது” என்றார்.  இந்தக் கருத்துகள் தொடர்பாகப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங்,  ``அவர்கள் இருவரின் கருத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரம் நடந்து 9 மாதங்கள் ஆகியும் அன்று அங்கு நடந்தது பற்றிப் பேசுவது ஆச்சர்யமாக உள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இதை ஒளிபரப்பியிருக்கக் கூடாது.

பாண்டிங்

எனினும், களத்தில் இருக்கும் வீரர்கள் இந்தக் கருத்துக்களில் கவனம் செலுத்தாமல், களத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஸ்மித் தனது தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அணிக்குத் திரும்புவார். அதேபோன்று, எதிர்காலத்தில் அவர் கேப்டனாகவும் செயல்படுவார் என நம்புகிறேன். ஒரு அணித் தலைவராகத் தோற்றுவிட்டதாக அவர் பேசியிருந்தார். தவறுகளில் இருந்து பாடம் கற்று, கூடுதல் பலத்துடன் சிறந்த தலைவராக வருவார்” என்றார்.