வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (27/12/2018)

கடைசி தொடர்பு:17:33 (27/12/2018)

டாப் ஸ்கோரர்... பெஸ்ட் பெளலர்... சர்ச்சை... ஐ.பி.எல் ஏலம்... 2018 கிரிக்கெட் ரீவைண்ட்!

சவால்கள், சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தும் நிறைந்ததுதான் கிரிக்கெட். கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை.

டாப் ஸ்கோரர்... பெஸ்ட் பெளலர்... சர்ச்சை... ஐ.பி.எல் ஏலம்... 2018 கிரிக்கெட் ரீவைண்ட்!

எப்போதும்போல இந்த ஆண்டும் கிரிக்கெட்டில் சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு இந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது என்று சொல்லலாம். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளில் இந்த ஆண்டு டெஸ்ட் வெற்றிகளைப் பதிவுசெய்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ரிஷப் பன்ட், ப்ரித்வி ஷா போன்ற இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளனர்.

நாளுக்கு நாள் சாதனை படைத்துக்கொண்டிருந்த விராட் கோலி, இந்த ஆண்டும் பல சாதனைகளைத் தகர்த்திருக்கிறார். ஐ.பி.எல்-லில் மாஸ் கம்பேக் கொடுத்து கோப்பையை மீண்டும் கையில் எடுத்தது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.  2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாயிலிருந்து 42 மடங்கு அதிகம் பெற்று 8.4 கோடி ரூபாய்க்கு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

கிரிக்கெட் 2018

இந்திய அணி மட்டுமல்லாமல், வெளிநாட்டு வீரர்கள் பலரும் 2018-ம் ஆண்டில் சாதனை படைத்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் தூணாக விளங்கிய அலெஸ்டர் குக் தன் கடைசிப் போட்டியில் சதத்துடன் ஓய்வுபெற்றார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் ஐசிசி தரவரிசையில் `நம்பர் 1' டி20 பெளலராகவும், ஒருநாள் போட்டியில் `நம்பர் 1' ஆல்ரவுண்டராகவும் இடம்பெற்றார். பாகிஸ்தான் வீரர் யஷிர் ஷா, `அதிக வேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகள்' எடுத்தவர் என்ற 82 ஆண்டுக்கால சாதனையை 2018-ம் ஆண்டில் முறியடித்தார். ஒருநாள் போட்டியின் அதிகபட்ச ஸ்கோரும் இந்த ஆண்டுதான் அடிக்கப்பட்டது.

மகளிர் கிரிக்கெட்டில், அயர்லாந்து அணிக்கு எதிராக 490 ரன் குவித்தது இங்கிலாந்து அணி. ஆண்கள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அடித்த ரன்கள் 481.

மகளிர் கிரிக்கெட்டுக்கு 2018-ம் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. பல சாதனைகள் செய்யப்பட்டன. மகளிர் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணி தட்டிச் சென்றது. இந்தியாவின் மிதாலி ராஜ், ஸ்ம்ரிதி மந்தனா, ஹர்மன் ப்ரீத் கவுர் எனப் பல வீராங்கனைகளும் தங்களின் ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

சாதனைகளைப்போலவே 2018-ம் ஆண்டில் மிகப்பெரிய சர்ச்சைகளும் உண்டானது. தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உதவியுடன் பந்தை சேதப்படுத்தினார் இளம் பந்துவீச்சாளர் பான்கிராஃப்ட். இதனால் ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இளம் வீரர் என்பதால் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் கோச் ரமேஷ் பொவார், மிதாலி ராஜ் மற்றும் இந்திய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் ஆகிய மூவரிடையே வார்த்தைப்போர் நடந்தது. 

2018-ம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று போட்டிகளிலும் அதிக ரன் மற்றும் விக்கெட் பெற்ற வீரர்களை கீழே காணலாம்...

 

 

2018-ல் கிரிக்கெட் அரங்கில் நடந்தவை அனைத்தையும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் - 2018 கிரிக்கெட் ரீவைண்ட்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்