`எல்லாம் சாத்தியம்தான்..!’ - பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு செரீனா வில்லியம்ஸின் மெசேஜ் | serena williams leaves an inspirational message to working parents

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (02/01/2019)

கடைசி தொடர்பு:18:20 (02/01/2019)

`எல்லாம் சாத்தியம்தான்..!’ - பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு செரீனா வில்லியம்ஸின் மெசேஜ்

                   செரீனா வில்லியம்ஸ்

``அடுத்த வருடத்தில் காலடி எடுத்துவைக்கிறேன். உழைக்கும் பெற்றோர்களான நாம் என்ன செய்ய முடியும் என்று யோசிக்காமல், நிச்சயமாக இதைச் செய்தே ஆக வேண்டும் என்பதை மனதில் கொள்வோம். எதுவும் சாத்தியம்தான். இந்த வருடத்தின் முதல் ஆட்டத்துக்காக நான் தயாராகிக்கொண்டிருக்கும் இதே வேளையில், என் அன்பு மகள் ஒலிம்பியா ஒஹானியன் அம்மாவின் அன்புக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். விளையாட்டுக்காகத் தயாராகும் எந்த நேரத்தையும் வார்ம் அப் செய்வதோ, ஸ்ட்ரெச்சோ அவளை அணைத்தபடியே இந்த நேரத்தைக் கடக்கிறேன்.

செரீனா வில்லியம்ஸ்

குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு உழைக்கும் அம்மாக்களும் அப்பாக்களும் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது கதைகளைக் கேட்கும்போது எனக்கு அளவற்ற ஊக்கம் கிடைக்கிறது. இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கெல்லாம் நன்றி. இந்த வருடம் உங்களுக்கானது” என்னும் செய்தியோடு அலெக்சிஸை அணைத்தபடியே ஸ்ட்ரெச் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார் செரீனா வில்லியம்ஸ்.

செரீனா வில்லியம்ஸ்

``பிஞ்சுக் கால்களின் முதல் நடையை என்னால் பார்க்க முடியவில்லை. மீண்டும் களத்தில் என்னை நிரூபிப்பதற்காகப் பயிற்சியில் இருக்கிறேன். மழலையின் நடையைக்கூட பார்க்க முடியாத தாயாகிவிட்டேன். என்னால் அழாமல் இருக்க முடியவில்லை'' - கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்த்து விளையாட இருந்த செரீனா கலக்கத்துடன் பதிவிட்டிருந்த வார்த்தைகள் இவை. 

வில்லியம்ஸ்

தனது ஃபிட்னெஸுக்காக, ஆண் என அடையாளப்படுத்தப்பட்டபோதும் அவரது கறுப்பின அடையாளத்துக்காக இன வெறுப்பின் வார்த்தைகளை எதிர்கொண்டபோதும் மோசமான ட்ரோல்களைச் சந்தித்தபோதும் 36 வயதில் குழந்தை பிறந்த 10 மாதத்தில், 24-வது கிராண்ட் ஸ்லாமை வெல்லக் களமிறங்கியவர் இந்த `தன்னம்பிக்கை தேவதை' செரீனா . 

நீங்க எப்படி பீல் பண்றீங்க