வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:07:06 (04/01/2019)

`தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்!’ - சென்னையில் இம்மாதம் தொடக்கம்

ஆண்களுக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் இம்மாதம் நடைபெறவுள்ளது.

ஹாக்கி

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக ஆண்களுக்கான 9-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜனவரி 7 முதல் 20-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப்போட்டிகள் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் மற்றும் ICF ஹாக்கி மைதானங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இவை இரண்டும் செயற்கை இழை மைதானங்கள். இதில் இந்தியா முழுவதுமிலிருந்து மாநில அணிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் 41 அணிகள் கலந்துகொள்கின்றனர். இந்திய அணி வீரர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீஜேஸ்

இந்தப்போட்டியில் தமிழக அணிக்காக இந்திய அணியின் கோல் கீப்பர்  ஸ்ரீஜேஸ் விளையாடவுள்ளார். அணி வீரர்கள் மற்றும் மேலாளர்கள் தங்குவதற்காக SDAT விளையாட்டு அரங்கங்கள் மற்றும் தனியார் தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போட்டியானது பன்னாட்டு தரத்தில் நடத்தப்படும் என்றும் அனைத்துப்போட்டிகளுக்கும் விரிவான மருத்துவ வசதி ஏற்படுத்தித் தரப்படும் எனப் போட்டி அமைப்பாளர் தெரிவித்துள்ளனர்.