வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (09/01/2019)

கடைசி தொடர்பு:10:29 (09/01/2019)

‘ஆஸ்திரேலியா மண்ணில் வரலாற்று வெற்றி’ - விராட் கோலிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து

ந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட்  கிரிக்கெட்  தொடர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இந்த வெற்றிக்கான  பாராட்டுகள் பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் வந்தவண்ணம் இருக்கின்றன.

இம்ரன் கான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை பலமுறை இந்தியா கைப்பற்றியிருந்தாலும், இந்தத் தொடர்தான் முதல்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடி, இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களுடைய மண்ணில் வெற்றிபெற்ற முதல் ஆசிய அணி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம்,  டெஸ்ட் பேட்ஸ்மேன் தர வரிசையில், 922 புள்ளிகளுடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 

விராட்  கோலி

இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாகிஸ்தானுக்கு, உலகக் கோப்பையை வாங்கித்தந்தவரும், அந்த நாட்டின் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான் “துணைக் கண்டத்தைச் சேர்ந்த அணி, முதல்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதற்காக, விராட் கோலிக்கும் இந்திய அணிக்கும் வாழ்த்துகள்” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.