சர்ச்சைக்குரிய ஹர்டிக் பாண்டியா எபிசோடை நீக்கியதா ஹாட்ஸ்டார்? | Did Hotstar remove the controversial episode with Pandya and Rahul?

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (11/01/2019)

கடைசி தொடர்பு:17:35 (11/01/2019)

சர்ச்சைக்குரிய ஹர்டிக் பாண்டியா எபிசோடை நீக்கியதா ஹாட்ஸ்டார்?

பிரபல செலிபிரிட்டி டாக் ஷோவான `காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்டிக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்துப் பேசிய கருத்துகளுக்காகக் கடும் விமர்சனத்துக்குள்ளானார்கள். இந்நிலையில் அந்த எபிசோடை தங்கள் தலத்தில் இருந்து நீக்கியுள்ளது ஹாட்ஸ்டார்.

ஹர்டிக் பாண்டியா

முக்கியமாக அந்த நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து பாண்டியா பேசியதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர் சமீபத்தில் மன்னிப்பும் கேட்டிருந்தார். இவரது பேச்சு பி.சி.சி.ஐ வரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒன்-டே தொடர் நடக்கவிருக்கும் நிலையில் இரு வீரர்களுக்கும் இடைக்காலத்தடை விதிக்கலாமா என்று பி.சி.சி.ஐ யோசிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. 

கரண் ஹாட்ஸ்டார்

இந்நிலையில், நேற்று இரவு தொடங்கி பலரும் இந்த சர்ச்சைக்குரிய எபிசோடை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ட்விட்டரில் தெரிவிக்க ஆரம்பித்தனர். என்னவென்று பார்த்ததில் உண்மையிலேயே அந்த எபிசோட் ஹாட்ஸ்டாரில் இல்லை. `காபி வித் கரண்’ நிகழ்ச்சிக்குரிய முகப்பு பக்கத்தில் வீரர்கள் ஹர்டிக் மற்றும் கே.எல்.ராகுல் எபிசோட் பற்றிய தகவல்கள் இருந்தும் உள்ளே இந்த எபிசோட் இல்லை. இந்த சீஸனில் இதுவரை வந்துள்ள மற்ற அனைத்து எபிசோட்களும் அந்த லிஸ்டில் இருக்கிறது. இப்படி திடீரென இதை ஹாட்ஸ்டார் நீக்கியது காரணம் என்ன, இது அந்த நிறுவனம் தன்னிச்சையாக எடுத்த முடிவா என்பது இன்னும் சரிவர தெரியவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க