`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா! | rohit sharma beats gayle records

வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (16/01/2019)

கடைசி தொடர்பு:03:15 (16/01/2019)

`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இன்றும் ஒரு சாதனை படைத்துள்ளார் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா. 

ரோஹித் ஷர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி, தோனி, ரோஹித் உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளது. கோலி தனது 39வது சதத்தை பூர்த்தி செய்தார். இதற்கிடையே, ரோஹித் ஷர்மாவும் இந்தப் போட்டியில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் 52 பந்துகளுக்கு 43 ரன்கள் சேர்த்து ரோஹித் ஆட்டமிழந்தார். 

ரோஹித்

இதில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்தார். இந்த ஆட்டத்தில் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் இந்த சாதனையில் முதலிடத்தில் இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 சிக்ஸர்கள் அடித்து, ஒரு அணிக்கு எதிராக தனி வீரர் ஒருவர் அடித்த அதிக சிக்ஸர் என்ற பெருமையை பெற்றிருந்தார் கெய்ல்.

ரோஹித்

இதனை முறியடித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 89 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா ஒட்டுமொத்தமாக இதுவரை ரோஹித்  210 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் 5-வது இடத்திலும், தோனி 219 சிக்ஸர்கள் அடித்து 4-வது இடத்திலும் உள்ளார். பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், கெய்ல் 275 சிக்ஸர்களுடன் 2-வது இடத்திலும், ஜெயசூர்யா 270 சிக்ஸர்களுடன்  3-வது இடத்திலும் உள்ளனர்.

ரோஹித் ஷர்மா

முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் ரோஹித் ஷர்மா பதிவு செய்த 5வது ஒருநாள் சதம் இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டும் முதல் இந்தியர் ரோஹித் ஷர்மா ஆவார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எப்பவும் சிறப்பாக விளையாடி வரும் ரோஹித் இந்த தொடரில் மேலும் சில சாதனைகளைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சாதனையை இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு ரோஹித் சிம்ம சொப்பனம் எனச் சிலர் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க