`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு! | Andy Murray has revealed he “would be able to deal with” his Australian Open

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (16/01/2019)

கடைசி தொடர்பு:07:30 (16/01/2019)

`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு!

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்டி முர்ரே தெரிவித்துள்ளார். 

ஆன்டி முர்ரே

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே. இவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக மெல்போர்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கடந்த 20 மாதங்களாக இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடி வருகிறேன். இனிமேலும் என்னால், வலியைத் தாங்கி கொள்ள முடியாது. காயம் குணமடைந்து விடும் என்றே நினைத்தேன். ஆனால் குணமடையவில்லை. இதனால் வேதனை அதிகமாக உள்ளது. முதலில் எனது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடருடன் ஓய்வு பெறலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு எனது காயம் இடங்கொடுக்கவில்லை. அதனால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரே தனது கடைசி போட்டியாக இருக்கலாம்" என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

முர்ரே

இதற்கிடையே, நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பிரிட்டனைச் சேர்ந்த பிரபல வீரர் ஆன்டி முர்ரே ஸ்பெய்னின் ரோபார்ட்டோ பேடிஸ்டாவிடம் 6-4, 6-4, 6-7 (5-7), 6-7 (4-7), 6-2 எனப் போராடி வீழ்ந்தார். போட்டிக்குப் பின் பேட்டி அளித்த அவர், “என்னால் முடிந்தது அவ்வளவு தான். இதுவே என்னுடைய கடைசி போட்டியா இருக்கலாம். இனிமேல் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பேனா என்று தெரியவில்லை. பெரிய ஆபரேஷன் ஒன்று இருக்கிறது. அதற்குப் பின் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பவது பற்றி உத்தரவாதம் இல்லை. ஒருவேளை ஆப்ரேஷன் இல்லை என்றால் விம்பிள்டன் தொடரில் களமிறங்குவேன். பிரிட்டன் டென்னிஸ் ரசிகர்களுக்கு எனது அறிவிப்பு சோகத்தை ஏற்படுத்தும் எனத் தெரியும். ஆனால் அவர்கள் அவ்வாறு இருப்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அது எனக்குத் தர்ம சங்கடத்தைத் தருகிறது” என்று தெரிவித்தார். 

முர்ரே

அவரின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து அவருக்குப் பிரபல டென்னிஸ் நட்சத்திரங்களான ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவோக் ஜோக்கோவிச், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.  முரேயின் சாதனைகளைப் பாராட்டி அவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க