`சுற்றி வர வேண்டியதுதானே?!’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo | Dhoni gets angry on kaleel during drinks break

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (16/01/2019)

கடைசி தொடர்பு:14:20 (16/01/2019)

`சுற்றி வர வேண்டியதுதானே?!’ - கலீல் அகமதுவைக் கண்டித்த தோனி #ViralVideo

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, தோனி கலீல் அகமதை கோபமாகத் திட்டியது வைரல் ஆகி வருகிறது. 

தோனி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 1-1 எனச் சமன் செய்தது. கோலியின் சதம், தோனியின் ஃபினிஷிங் என இந்தப் போட்டி இந்திய ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது. 

கோலி தோனி

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு மைதானத்தில் நேற்று கடும் வெப்பம் நிலவியது. இதனால் வீரர்கள் சிரமத்துடனே விளையாடினர். ஆட்டத்தின் நடுவில் தோனி மிகவும் சோர்வாக காணப்பட்டார். ஓவர்கள் இடைவெளியின்போது வீரர்களுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டுக் கொண்டு இருந்தது. 

தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் களத்தில் இருந்தபோது 12 வது-வீரர் கலீல் அகமது தண்ணீர் கொண்டு வந்தார். அப்போது ஆடுகளத்தின் மீது நடந்து வந்தார். இதைக் கவனித்த மிஸ்டர் கூல் தோனியே டென்ஷன் ஆனார். ஆடுகளத்தைச் சுற்றி வர வேண்டியதுதானே எனக் கோபத்துடன் கூறினார். 

தோனி

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. ஒரு பந்துவீச்சாளராக கலீல் அகமதுக்குதான் ஆடுகளத்தின் மீது அதிக மதிப்பும் கவலையும் இருக்க வேண்டும். ஆனால் அவரே இப்படிச் செய்வதை தோனியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனத் தோனி ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

ஆடும் களத்தின் மீது உள்ள மரியாதைதான் தோனியின் இந்த வெற்றிக்குக் காரணம் என தோனி ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.